User: servelots Topic: tnussp_tamil
Category: Hygiene
1 new since Jul 09 2020 15:27 IST RSS 2.0
 
1 to 20 of 6,945    
காளையார்கோவிலில் விளைநிலங்களை ஆக்கிரமித்த கருவேலம்: வேரோடு பிடுங்கி எறியப்படுமா? 9.7.2020 Dinakaran.com |07 Dec 2016
காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியத்தில் அதிகப்படியான மக்கள் விவசாயத்தைச் சார்ந்தே வாழ்கின்றனர். விளைநிலங்களில் சீமை கருவேலமரங்களின் அதிகப்படியான வளர்ச்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தைச் சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் மண் மலட்டுத் தன்மை ஆவதுடன் நிலத்தடி நீரும் அதிகளவு உறிஞ்சப்படுவதினால் விளைச்சல் பாதிப்படைகிறது. சீமைக் கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களை காப்பாற்ற முடியும். இதற்கான இயந்திரச் செலவு அதிகமாக இருப்பதால்,  போதிய வசதியில்லாத விவசாயிகள்  அழிக்காமல் விட்டுவிட்டனர். இதை கருத்தில் கொண்டு சில வருடத்திற்கு முன் சீமைகருவேலா மரங்களை அழிப்பதற்கு அரசு முன்வந்து தாலுகா அலுவலகத்தின் மூலமாக ஏலம் விடப்பட்டன. ஏலம் எடுப்பவர்களிடம் கருவேல மரங்களை முழுமையான அகற்றுவதற்கான விதி முறைகளை அறிவிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் ஒவ்வொரு பகுதிகளிலும் முழுமையாக வெட்டாமலும், வெட்டிய மரத்தின் வேர்பகுதிகளை தோண்டாமலும் விட்டுவிட்டனர். இதனால் தற்போது பெய்த சிறு மழைக்கு அதிகமாக கருவேல்மரங்கள் முளைத்து உள்ளன. இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் விவசாயம் செய்வதற்கான ...
கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார சீர்கேடு: ஊழியர்களை முற்றுகையிட்டு நோயாளிகள் போராட்டம் 9.7.2020 Dinakaran.com |07 Dec 2016
ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் ஒரகடம் அடுத்த எழுச்சூர் கிராமத்தில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி, தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்து, சிகிச்சை அளிக்கபடுகிறது. தற்போது இந்த சிகிச்சை மையத்தில் கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரமான குடிநீர் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், மருந்து மாத்திரைகள், முறையாக வழங்கவில்லை என கூறி கொரோனா நோயாளிகள், ஊழியர்களுடன் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் உணவு வழங்கி வருவதால், நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அங்கு சென்று, நோயாளிகளிடம் சமரசம் பேசினர். பின்னர் அவர்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவதாக கூறி உறுதியளித்தனர். தொடர்ந்து, கழிப்பறையை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி ...
Also found in: [+]
‘நீட்’ வழிமுறைகள் வெளியீடு 8.7.2020
டெல்லி, ஜூலை.8- ‘நீட்’ தேர்வு மற்றும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு (NEET), பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் (JEE MAIN) மற்றும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தேர்வு நடக்கும் போது மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதானை கட்டாயம் நடத்தப்பட வேண்டும். தேர்வறை கண்காணிப்பாளருக்கு உடல்நிலை சான்றிதழ் அவசியம் வழங்கப்பட […]
விவசாய மண் வளத்தை பாழாக்கும் கருவேல மரங்கள் அகற்றப்படுமா? 8.7.2020 Dinakaran.com |07 Dec 2016
காளையார்கோவில்: காளையார்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஏக்கர் விளைநிலங்களில் உள்ள கருவேல மரங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவில் ஒன்றியம் சுமார் 360 கிராமங்களைக் கொண்டது. இங்கு விளைநிலங்களில் சீமைக் கருவேலமரங்களின் அதிகப்படியான வளர்ச்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தைச் சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் மண் மலட்டுத் தன்மை ஆவதுடன் நிலத்தடி நீரும் அதிகளவு உறிஞ்சப்படுவதினால் விளைச்சல் பாதிப்படைகிறது. கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களை காப்பாற்ற முடியும். இதற்கான இயந்திரச் செலவு அதிகமாக இருப்பதால், போதிய வசதியில்லாத விவசாயிகள்  அழிக்காமல் விட்டு விட்டனர். இதைகருத்தில் கொண்டு சில வருடத்திற்கு முன்னால் சீமைகருவேல மரங்களை அளிப்பதற்கு அரசு முன்வந்து தாலுகா அலுவலகத்தின் மூலமாக ஏலம் விடப்பட்டன. ஏலம் எடுப்பவர்களிடம் கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதற்கான விதி முறைகளை அறிவிக்காமல் ஏலம் விடப்பட்டதால் ஒவ்வொரு பகுதிகளிலும் முழுமையாக வெட்டாமலும், வெட்டிய மரத்தின் வேர்பகுதிகளை தோண்டாமலும் விட்டு விட்டனர். இதனால் ...
வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !! 8.7.2020 மரு‌த்துவ‌ம்
முட்டைக்கோஸை காய்களோடு சமைத்து சாப்பிடுவதை விட அதை ஜூஸ் செய்து சாப்பிடுவதால், அதிலுள்ள முழுமையான சத்துக்களையும் நம் உடல் உறிஞ்சிக் கொள்கிறது. மேலும் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெற எளிய அழகு குறிப்புகள்...!! 8.7.2020 மரு‌த்துவ‌ம்
1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யை 1/3 தேக்கரண்டி படிகாரத்தூளுடன் நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்கள் தோல் மீது மெதுவாக தடவி மிருதுவாக மசாஜ் செய்யவும்.
சுருட்டப்பள்ளி - ஊத்துக்கோட்டை வரை புதர் மண்டி கிடக்கும் ஏரி கால்வாய்: சீரமைக்க கோரிக்கை 8.7.2020 Dinakaran.com |07 Dec 2016
ஊத்துக்கோட்டை: சுருட்டபள்ளி அணை முதல் ஊத்துக்கோட்டை ஏரி வரை உள்ள கால்வாய் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனை மழைக்காலத்துக்கு முன்பே சீரமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மிகப்பெரிய ஏரியான 914 ஏக்கர்  கொண்ட ஈசா ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழை காலங்களில் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் மழைநீர் நிரம்பியதும் மதகு திறக்கப்பட்டால் சுருட்டபள்ளி அணைக்கட்டிற்கு வந்து அங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பின்னர் அங்குள்ள ஏரி கால்வாய் வழியாக ஊத்துகோட்டை ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பியதும், இங்கிருந்து  தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், சிங்கிலி குப்பம், செஞ்சியகரம், முக்கரம் பாக்கம் என 14 ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் அனைத்தும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இது விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாகும், இந்நிலையில், சுருட்டபள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரி வரை உள்ள கால்வாய் முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது. மேலும் அதுமட்டுமல்லாமல் கால்வாய் கரை ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், ஏரிக்கால்வாயில் ...
Also found in: [+]
தேமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் சில மூலிகைகள்...!! 7.7.2020 மரு‌த்துவ‌ம்
சில மூலிகைகள் உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி, தேமல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றன. அவற்றை நீங்கள் கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. உங்களது வீட்டின் அருகிலேயே இருக்கும் மூலிகைகளை பயன்படுத்தி தேமல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்க சில குறிப்புகள்...! 7.7.2020 மரு‌த்துவ‌ம்
பப்பாளி சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்ற உதவும் சில குறிப்புகளை பார்ப்போம்.
தேவகோட்டையில் பேவர் பிளாக் சாலைகள் சேதம்: உடனே சீரமைக்கப்படுமா? 7.7.2020 Dinakaran.com |07 Dec 2016
தேவகோட்டை: தேவகோட்டையில் சாலைகள் சேதமடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தேவகோட்டை மைனர் வீதியில் சில வருடங்களுக்கு முன் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. அப்போது சாக்கடை கால்வாயும் அமைக்கப்பட்டது. தற்போது மைனர் வீதியிலும் அதனைச் சார்ந்த சந்துகளிலும் சாலைகளில் உள்ள கற்கள் பெயர்ந்து பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் குப்பைகள் சாக்கடை கால்வாயில் விழுந்து அடைபட்டு கிடக்கிறது. நகராட்சியின் சார்பில் இப்பகுதியில் கொரோனா காலத்தில் கூட துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை. எங்கு பார்த்தாலும் கொரோனா தொற்று பயம் இருக்கும் வேளையில் நகராட்சி நிர்வாகம் அறவே கண்டுகொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இனி வரும் நாட்களிலாவது துப்புரவுப்பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி ...
50 ஆண்டுகளாக வற்றி கிடந்த அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி: பொதுமக்கள் மகிழ்ச்சி 7.7.2020 Dinakaran.com |07 Dec 2016
தஞ்சை: தஞ்சை நகரில் 50 ஆண்டுகளாக வற்றி கிடந்த அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன், மக்களுக்கு பொற்கால ஆட்சி அளித்தார் என வரலாறு கூறுகிறது. தஞ்சை நகருக்கு வற்றாத நீர்த்தேவைக்காக நகர் முழுவதும் 50க்கும் மேற்பட்ட குளங்களை உருவாக்கினார். இதில் ஒரு சில குளங்களை தவிர கிட்டத்தட்ட அனைத்து குளங்களும் இன்று மறைந்து போய்விட்டது. குளங்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கு அந்தந்த பகுதி மக்களே களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.அந்த வகையில் தஞ்சை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள அழகி குளமும் ஒன்று. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம் காலப்போக்கில் புதர் மண்டியும், கருவேல மரங்கள் மண்டியும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி போனது. சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து இக்குளத்தின் வந்த நீர் பாதை தூர்ந்து போய் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் ராணி வாய்க்கால் மூலம் இக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இவ்வழிகள் எல்லாம் அடைப்பட்டு பெரிய பெரிய கட்டிடங்கள் உருவாகிவிட்டன. இதனால் கடந்த 50 ஆண்டுகளாக இந்த குளத்துக்கு நீர்வரத்து சுத்தமாக இல்லை. இந்நிலையில் ...
முடி உதிர்வு மற்றும் இளநரையை நீக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்....!! 7.7.2020 மரு‌த்துவ‌ம்
வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
திண்டுக்கல் அருகே சாலையில் கழிவுநீர் ஓடுவதால் மக்கள் அவதி 5.7.2020 Dinakaran.com |07 Dec 2016
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ளது வேதாத்திரி நகர். இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மீது பாலம் அமைப்பதற்காக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சார்பாக ஒப்பந்தம் விடப்பட்டு, பாலம் கட்டும் பணியை எடுத்த ஒப்பந்ததாரர் கழிவுநீர் கால்வாயை அடைத்து வேதாதிரி நகர் செல்லும் சாலைகளை உடைத்து கழிவுநீரை மாற்றுப் பாதையில் செலுத்தினர்.இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாலம் வேலை முடிவடைந்தது. ஆனால் தற்போது வரை கழிவுநீர் கால்வாயில் இருந்த அடைப்பை தற்போது வரை எடுக்காததால் இப்பகுதியின் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நடக்க முடியாமலும், துர்நாற்றத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் நிலையும் உள்ளது. அதனால் உடனடியாக கழிவுநீர் வாய்க்கால் அடைப்பை எடுத்துவிட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை ...
Also found in: [+]
கொரோனா ஊரடங்குக்கு பின் உங்கள் வேலை எப்படி மாறும்? 4.7.2020 tamil.webdunia.com
2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதிலிருந்து, பூர்வி ஷா தன் வீட்டிலிருந்தபடியே அலுவலக பணியை மேற்கொள்கிறார். இரண்டு குழந்தைகளின் தாயான பூர்வி ஷா பொது தகவல் தொடர்பு நிபுணராக பணியாற்றி வருகிறார். தனது அலுவலக ...
Also found in: [+]
சாத்தான்குளம் வழக்கில் கைதான காவல் ஆய்வாளருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் 4.7.2020 Dinakaran.com |07 Dec 2016
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற காவலர் சோமசுந்தரம் வீட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாபமாக பலியானார்கள். ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை, மகன் சிறை மரணம் அடைந்த நிலையில் மேலும் ஒரு கொடூர சம்பவமாக நான்கு பேர் உயிரிழப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 4 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பங்கேற்றனர். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கும் உடனடியாக முதல்வர் நிவாரணம் அறிவித்தார். அதன்படி, இன்று நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக ...
முகத்தை பராமரிக்க எளிய சில இயற்கை குறிப்புகள்...!! 4.7.2020 மரு‌த்துவ‌ம்
அரை தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெய்யை ஒன்றாக எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் தடவவும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 11 பேர் சாவு: பாதிப்பு எண்ணிக்கை 6139 ஆக உயர்ந்தது 4.7.2020 Dinakaran.com |07 Dec 2016
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேர் இறந்தனர். 303 பேருக்கு கொரோனா உறுதியானது. 11 பேர் இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை 6139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3150 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேற்று வரை 106 பேர் சிகிச்சை பலனின்றி இருந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர் இதில் நேற்று ஒரே நாளில் 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மற்ற நோயாளிகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில், பம்பல் நகராட்சியில் 23 வயது இளம்பெண், 23 வயது வாலிபர் உள்பட 3 பேர், பல்லாவரம் நகராட்சியில் ஒரு ஆண், காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பேர், மறைமலை நகரை சேர்ந்த 3பேர், மதுராந்தகம், மாமல்லபுரத்தை சேர்ந்த தலா ஒருவர்  என நேற்று ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 11பேர் இறந்தனர்.சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று குறையவில்லை. இறப்பும் எண்ணிக்கையும் ...
பார்லி. நிலைக்குழுக்கள் கூட்டங்களுக்கான விதிமுறைகள் வெளியீடு 3.7.2020 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் ; 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவு!! 3.7.2020 Dinakaran.com |07 Dec 2016
சென்னை : தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், செக்காரக்குடி கிராமத்தில், தனியார் ஒருவருடைய வீட்டில் நேற்று கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்க முயன்ற போது,  திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகிய நான்கு நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, ' தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.இச்சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட  நிர்வாகத்திற்கு நான் ...
நாகர்கோவில் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சுகாதாரம் இல்லை: நோயாளிகளே சுத்தம் செய்யும் வீடியோவால் அதிர்ச்சி! 3.7.2020 Dinakaran.com |07 Dec 2016
நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைக்கான வார்டை நோயாளிகளே சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 300க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை வார்டை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்கள் வருவதில்லை. நோயாளிகள் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தினமும் பரிசோதிப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது. பணியாளர்கள் வராததால் நோயாளிகளே தாங்கள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சுகாதார பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாததே இந்த நிலைக்கு கரணம் என்று கூறப்படுகிறது. நோயாளிகளே கொரோனா வார்டை சுத்தம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களது உடல்நிலை மேலும் மோசமாகும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அணைத்து தரப்பினரின் கோரிக்கையாக ...
Also found in: [+]
1 to 20 of 6,945