User: servelots Topic: tnussp_english
Category: Hygiene
Last updated: Sep 26 2017 03:50 IST RSS 2.0
 
1 to 20 of 26    
அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு 26.9.2017 Dinakaran.com |07 Dec 2016

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனை யில் குடிநீர் குழாய் உடைந்து விட்டது.  இந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக, குடிநீர் இல்லாமல் நோயாளிகளும், கர்ப்பிணிகளும் பெரும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்க கே.பி.பி.சாமி தனது எம்எல்ஏ  நிதியில் இருந்து  ₹5 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். இந்த பணிகள் இரு தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து நேற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கே.பி.பி.சாமி எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் எம்.வி.குமார், குமரேசன், நவகுமார், ராஜி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Also found in: [+]
சுத்திகரிப்பு நிலைய சோதனை ஓட்டத்தில் ஓடை கழிவு நீரில் உப்பு தன்மை அதிகரிப்பால் அதிகாரிகள் அதிர்ச்சி 13.9.2017 Dinakaran.com |07 Dec 2016
ஈரோடு: ஈரோடு சுண்ணாம்புஓடை, பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடைகளில் உள்ளாட்சி அமைப்புகளின் சாக்கடை கழிவு நீர் மற்றும் சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் நேரடியாக காவிரி ஆற்றில் சென்று கலக்குகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் விநியோகிக்கும் குடிநீர் மாசுபடிந்து வருகிறது. இந்நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஈரோடு சூளை, பிச்சைக்காரன் ஓடையில் ரூ.1.80 கோடி செலவில் இரண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு யூனிட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு முதல்கட்டமாக ஒரு இயந்திரம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஓடையில் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வருகின்றனர். நாளொன்றுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சோதனை ஓட்டத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. இதில் டி.டி.எஸ் எனப்படும் தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை கட்டுக்குள் வராமல் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. டி.டி.எஸ் அளவு 700க்கும் கீழ் இருந்தால் மறுசுழற்சி முறையில் விவசாயம், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியும்.ஆனால் பிச்சைக்காரன் ஓடை கழிவு நீரில் ...
Also found in: [+]
Hyderabad varsity develops Sambha Mahsuri variety 5.9.2017 BusinessLine - Economy
A new variety of the widely cultivated Sambha Mahsuri has been developed by a consortium of Indian, Canadian and Chinese scientists.The ‘transgenic variety’, which has a gene from a weedy plant suitab...
Also found in: [+]
நீர்ப்பிடிப்பில் தொடர்மழை : பெரியாறு நீர்மட்டம் 115 அடியாக உயர்வு 23.8.2017 Dinakaran.com |07 Dec 2016
கம்பம்: நீர்ப்பிடிப்பில் தொடர்மழை பெய்வதால் பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் வினாடிக்கு 657 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 1,776 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டி உள்ளது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 114.80 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,776 கனஅடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 225 கனஅடியாகவும் இருந்தது.  இருப்புநீர் 1,693 மில்லியன் கனஅடியாக உள்ளது.71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 29.37 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து மதுரை குடிநீருக்காக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இருப்பு நீர் 326 மில்லியன் கனஅடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.90 அடியாக இருந்தது.  நீர்வரத்து வினாடிக்கு 15 கன அடி. நீர் வெளியேற்றம் இல்லை. இருப்புநீர் 103.81 மில்லியன் கனஅடி. 126 அடி உயரமுள்ள ...
Also found in: [+]
சிட்லபாக்கத்தில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு 22.8.2017 Dinakaran.com |07 Dec 2016

தாம்பரம் : சிட்லபாக்கம் பேரூராட்சி 12வது வார்டு கண்ணகி தெருவில் தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எடுக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தாம்பரம் திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவிடம் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதை எஸ்.ஆர்.ராஜா திறந்து வைத்தார்.

Also found in: [+]
சிட்லபாக்கத்தில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு 22.8.2017 Dinakaran.com |07 Dec 2016

தாம்பரம் : சிட்லபாக்கம் பேரூராட்சி 12வது வார்டு கண்ணகி தெருவில் தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எடுக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தாம்பரம் திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவிடம் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதை எஸ்.ஆர்.ராஜா திறந்து வைத்தார்.

Also found in: [+]
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மெட்ரோ ரயில் நிலைய அலுவலகத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்: தினமும் 80 ஆயிரம் லிட்டர் கிடைக்கும் 15.8.2017 Dinakaran.com |07 Dec 2016
ெசன்னை : தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகம் மற்றும் பராமரிப்பு பணிமனைக்கு தினமும் 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தினமும் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் தேவை. சென்னை குடிநீர் நிறுவனத்தில் இருந்தும் தனியார் டேங்கர் லாரிகள் மூலமும் இந்த தேவையை சமாளித்து வருகிறோம். ஆனால், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எங்களுக்கு தேவையான தண்ணீரை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்த பிரச்னையை சமாளிக்க  தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளோம்.  தினமும் 80 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கும் வகையில் இந்த நிலையம் அமைக்கப்படும். இதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை தலைமை அலுவலகம், ரயில் நிலையங்கள் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு பயன்படுத்துவோம். சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் ...
Also found in: [+]
Mr. Fadnavis’s neglected child 22.7.2017 Hindu: Cities
CM ‘adopted’ the village in 2015, but it still lacks basic amenities and has had little development
Also found in: [+]
“தண்ணீரை நாங்கள் பரிசோதிக்கவில்லை... இப்போது கையில் எந்த டேட்டாவும் இல்லை!” - ஓ.என்.ஜி.சி நடத்திய ‘அடடே’ பிரஸ் மீட் 19.7.2017 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இன்று   ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அங்கு அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்களும், 
Also found in: [+]
போரூர் ஏரியில் குடிநீர் சுத்திகரிக்கும் திட்டம் : அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார் 11.7.2017 Dinakaran.com |07 Dec 2016

சென்னை : சென்னை போரூர் ஏரியில் குடிநீர் சுத்திகரிக்கும் திட்டத்தை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார் . இந்த திட்டம் மூலம் ஏரியிலிருந்து 40 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து குடிநீராக விநோயோகிக்கப்படும்.

Also found in: [+]
போரூர் ஏரியில் குடிநீர் சுத்திகரிக்கும் திட்டம் : அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார் 11.7.2017 Dinakaran.com |07 Dec 2016

சென்னை : சென்னை போரூர் ஏரியில் குடிநீர் சுத்திகரிக்கும் திட்டத்தை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார் . இந்த திட்டம் மூலம் ஏரியிலிருந்து 40 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து குடிநீராக விநோயோகிக்கப்படும்.

Also found in: [+]
நிலத்தடி நீர்மட்டம் ஜீரோ ; கடல் நீரைக் குடிநீராக்கும் ஜீப்! 7.7.2017 Junior Vikatan
இஸ்ரேலில் ஒரு ஜீப் இருக்கிறது. அதைச் சாதாரண ஜீப் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். நிமிடத்தில் பல லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திறன் படைத்தது அந்த ஜீப். 
Also found in: [+]
நடமாடும் நீர்சுத்திகரிப்பு வாகனத்தில் இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து பயணித்த பிரதமர் மோடி! 7.7.2017 Oneindia - thatsTamil
டெல் அவிவ்: இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுடன் நடமாடும் நீர் சுத்திகரிப்பு வாகனத்தில் இணைந்து பயணித்து பயன்பாடுகளை கேட்டறிந்தார். இந்திய வரலாற்றிலேயே இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதமர் நரேந்திர மோடிதான். பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஆதரித்து வந்ததால் இஸ்ரேலுக்கு இந்திய பிரதமர்கள் எவரும் சென்றதில்லை. ஆனால் இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி
Also found in: [+]
Irrigation tips from an arid country 3.7.2017 Columns – The Indian Express
Also found in: [+]
தாடண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைத்ததில் முறைகேடு: 6 மாதமாக இயங்காததால் அதிருப்தி 12.6.2017 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இதில், பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு தனியாக 2 அடுக்கு மாடி கொண்ட குடியிருப்பில் 36 வீடுகள் உள்ளன. மேலும், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர்கள் நிலையிலான அதிகாரிகளுக்கு தனி கட்டிடம், கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் நிலையிலான அதிகாரிகளுக்கு தனி அடுக்கு மாடி கட்டிடம் என்று பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு போர்வெல் அமைத்து, டேங்க் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த டேங்குகளுக்கு செல்லும் தண்ணீரை சுத்திகரிக்க கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ரூ.1 கோடி செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருதி பொருத்தப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரம் லிட்டருக்கு மேல் சுத்திகரிக்கும் இந்த கருவி தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நிறுவப்பட்டது. இந்நிலையில், கருவி நிறுவப்பட்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது. கடந்த 6 மாதங்களாக குடிநீர் சுத்திகரிப்பு கருவி இயங்கவில்லை. போர்வெல் மூலம் வரும் நீர் மஞ்சள் நிறத்தில் வருவதாலும், தண்ணீர் சில நேரங்களில் தூசியாக இருப்பதாலும் நீரை பயன்படுத்த முடியாத ...
Also found in: [+]
மக்களுக்கு பயன்படாத குடிநீர் சுத்திகரிப்பு மையம் 25.5.2017 Dinakaran.com |07 Dec 2016
தங்கவயல்: தங்கவயல் அரசு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு மையம் உபயோமில்லாமல் துருபிடித்து கொண்டிருக்கிறது என்று பயணிகள் குற்றம் சாட்டினர். தங்கவயலில் நகரசபைக்கு சொந்தமாக பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நகரசபை அலுவலகம் அருகில் பல லட்சம் செலவில் அரசு போக்குவரத்து கழக பஸ் நிலையம் கட்டப்பட்டது. சில நாட்கள் இந்த பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. பயணிகளிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால் படிப்படியாக பஸ்கள் வருவது குறைந்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக குடிநீர் சுத்தகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் வளர்ச்சித்துறை, வாட்டர் லைப் ஆப் இந்தியா தனியார் நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் இணைந்து அமைத்துள்ள குடிநீர் சுத்தகரிப்பு மையத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு பயன்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறக்கப்படாததால் பயணிகள் அதிக விலைகொடுத்து தண்ணீர் பாட்டில்கள் வாங்க வேண்டிய ...
Also found in: [+]
ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு 8.5.2017 Dinakaran.com |07 Dec 2016

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு நடைபெற்றது. ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் பேபி தலைமையில் குழு ஆய்வு செய்தது. தனியார் சுத்திகரிப்பு நிலையம் வெளியேற்றும் கழிவுநீரால் நோய் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Also found in: [+]
ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு 8.5.2017 Dinakaran.com |07 Dec 2016

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு நடைபெற்றது. ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் பேபி தலைமையில் குழு ஆய்வு செய்தது. தனியார் சுத்திகரிப்பு நிலையம் வெளியேற்றும் கழிவுநீரால் நோய் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Also found in: [+]
திருப்பூர் அருகே சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு 5.5.2017 Dinakaran.com |07 Dec 2016

திருப்பூர் : அதிகளவு சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து மாசு கலந்த நீரை வெளியேறுவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காசிப்பாளையம் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 22 லட்சம் லிட்டர் நீருக்கு பதிலாக 80 லட்சம் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக   திருப்பூரை சேர்ந்த முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Also found in: [+]
திருப்பூர் அருகே சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு 5.5.2017 Dinakaran.com |07 Dec 2016

திருப்பூர் : அதிகளவு சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து மாசு கலந்த நீரை வெளியேறுவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காசிப்பாளையம் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 22 லட்சம் லிட்டர் நீருக்கு பதிலாக 80 லட்சம் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக   திருப்பூரை சேர்ந்த முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Also found in: [+]
1 to 20 of 26