User: servelots Topic: tnussp_english
Category: Sanitation
Last updated: Jul 17 2018 15:52 IST RSS 2.0
 
1 to 20 of 809    
கழிப்பறையை மேம்படுத்த பரிசு தொகை ரூ.10 ஆயிரத்தை பள்ளிக்கே தந்த கனவு ஆசிரியர் 17.7.2018 Dinakaran.com |07 Dec 2016
முத்துப்பேட்டை: கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பரிசாக கிடைத்த ரூ.10 ஆயிரத்தை பள்ளி கழிவறை மேம்படுத்த வழங்கினார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் செல்வசிதம்பரம். இவரை பாராட்டி பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  பள்ளிக்கல்வி துறை சார்பில் வழங்கப்பட்ட கனவு ஆசிரியர் விருதுக்கு செல்வசிதம்பரம் தேர்வு செய்யப்பட்டு திருச்சியில் நடந்த விழாவில் விருதும் அதற்கான பரிசு தொகை ரூ.10ஆயிரமும் பெற்றார்.  இந்நிலையில் நேற்று பள்ளியில் காமராஜர் பிறந்த தினவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர்கள் சொக்கலிங்கம் மற்றும் முருகபாஸ்கர் ஆகியோரிடம் கனவு ஆசிரியர் விருது பெற்ற செல்வசிதம்பரம் தான் கனவு ஆசிரியர் விருதுடன் பெற்ற பரிசுத்தொகையான 10ஆயிரம் பணத்தை தனது பள்ளியில் மாணவர்கள் பயன் படுத்தும் கழிப்பறையை மேலும் மேம்படுத்த நன்கொடையாக வழங்கினார். அனைவரும் ...
சொல்லிட்டாங்க... 17.7.2018 Dinakaran.com |07 Dec 2016

முதல்வரின் பினாமி நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் வழங்கப்படுவது, ஊரெல்லாம் நாற்றமெடுக்கும் நெடுஞ்சாலைத்துறைச்  சாக்கடை ரகசியங்கள். - திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.நான் மத்திய அமைச்சராக இருந்தபோது இந்தியா முழுவதும் குட்காவை தடை செய்தேன். ஆனால் இன்று தமிழகத்தின் அமைச்சர், உயர் அதிகாரிகள்  அதை விற்பனை செய்து வருகின்றனர். - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி. காங்கிரஸ் கட்சியை முற்றிலும் ஒழித்துவிட்டதாக கூறும் ஜெயக்குமார், புழல் சிறையில் கம்பி எண்ணுவார். - தமிழக காங். முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்.முட்டைக்கு அடுத்தபடியாக அதிமுகவுக்கு அடுத்த வெடிகுண்டு தயார். அது எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு. அதில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக  அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை. - அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.

Also found in: [+]
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 103 கோடியில் பூங்கா பாதாள சாக்கடை திட்டம்: முதல்வர் திறந்து வைத்தார் 17.7.2018 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் முகலிவாக்கம் சந்தோஷ் நகரின் ராமச்சந்திரன் தெருவில் 85 லட்சம் செலவில்  அமைக்கப்பட்டுள்ள பூங்கா, எண்ணூர் சுனாமி குடியிருப்பு ஏஐஆர் நகர் மற்றும் பாலகிருஷ்ணா நகர் (கண்ணாடி தொழிற்சாலை) ஆகிய இடங்களில் 84  லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்கள், மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட புழல் வெஜிடேரியன் வில்லேஜ், கங்காதரன் தெரு, புத்தகரம்  சூரப்பட்டு, கதிர்வேடு பத்மாவதி நகர் சர்வீஸ் சாலை பிர்லா அவென்யூ அருகில், கதிர்வேடு பத்மாவதி நகர் 7வது தெரு, பொன்னியம்மன் மேடு  தணிகாசலம் நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 பூங்காக்கள், அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட முகப்பேர் திருமங்கலம் பிரதான சாலை,  வி.ஜி.பி. நகர் (வருண் அபார்ட்மென்ட்ஸ் அருகில்), வீரமாமுனிவர் தெரு (எம்.ஜி.ஆர். ஆதர்ஷ் பள்ளி எதிரில்) ஆகிய இடங்களில் 3 பூங்காக்கள், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட முகலிவாக்கம் அன்னை வேளாங்கன்னி நகர் பேஸ்-2,  சோழிங்கநல்லூர் ராஜீவ் காந்தி சாலை (டாலர் பில்டிங் அருகில்) ஆகிய இடங்களில் 2  பூங்காக்கள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ...
Also found in: [+]
காவிரியில் கழிவுநீர் கலக்கப்படுவது தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் 2வது அறிக்கையை தாக்கல் செய்தது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 16.7.2018 Dinakaran.com |07 Dec 2016
டெல்லி : காவிரியில் கழிவுநீர் கலக்கப்படுவது பற்றி தமிழகம் தொடுத்த வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2வது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கர்நாடகத்தின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு பல கிலோ மீட்டர் தூரம் தாண்டி தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்திற்கு வரும் வழியில் இந்த ஆற்றில், பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் கலக்கப்படுவதாக தமிழகம் புகார் தெரிவித்தது. ஆனால் கர்நாடக அரசோ இதை தடுக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காவிரி ஆற்றில் கலந்து வரும் மொத்த கழிவுகளில் சுமார் 15 - 20 சதவீதம் மட்டுமே கர்நாடக அரசால் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் பல அபாயகரமான கழிவுகளோடுதான் காவிரி நீர் தமிழகத்தை வந்து சேருகிறது.இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரியில் கழிவு நீர் கலப்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து காவிரி ஆற்றில் கலக்கும் கழிவு நீர் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் - கர்நாடகம் - மத்திய அரசு இணைந்து ...
Also found in: [+]
திருத்துறைப்பூண்டியில் நகராட்சி சார்பில் அமைத்த குழாயில் குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர் 14.7.2018 Dinakaran.com |07 Dec 2016
திருத்துறைப்பூண்டி :  திருத்துறைப்பூண்டியில் நகராட்சி சார்பில் அமைத்துள்ள குழாயில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் பொதுமக்கள் நோய் அச்சத்தில் நாட்களை கழிக்கின்றனர். திருத்துறைப்பூண்டி நகராட்சியின் 8வது வார்டு பகுதியில் உள்ள கழுவமுள்ளி தெரு, ஆற்றாங்கரை தெரு ஆகியவற்றில் வசிக்கும் பொதுமக்களுக்காக நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி முள்ளியாற்றின் கரைப்பகுதியில் சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த குழாயில் சுமார் 40க்கு மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த பகுதியில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகாலில் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாததால் தேங்கி நிற்கிறது. இதன் அருகிலேயே குடிநீர் குழாயும் அமைந்துள்ளது. இந்த குழாயில் காலை நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதும் சுமார் 10 குடங்களுக்கு மேல் அதிக அளவில் கழிவு நீருடன் கலந்து குடிநீர் வருகிறது. அதனை பொதுமக்கள் பிடித்து கீழே ஊற்றுகிறார்கள். அதனை தொடர்ந்து குழாயில் வரும் தண்ணீரை பிடித்து காய்ச்சி வடிகட்டி மட்டுமே அவர்கள் குடிக்க வேண்டியதாக உள்ளது. இதனால் எந்தவிதமான நோய் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவர்கள் ...
Also found in: [+]
அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய 1000 நவீன வாகனங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் 13.7.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சீருடை அடுத்த ஆண்டு முதல் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் 32 மாவட்டங்களிலும் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 20 ஆயிரம் அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய 1000 நவீன வாகனங்கள் வாங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Also found in: [+]
வடிவுடை அம்மன் கோயிலில் 10 லட்சத்தில் குளியலறை கழிப்பறை அமைக்கப்படும் : திமுக எம்எல்ஏ உறுதி 13.7.2018 Dinakaran.com |07 Dec 2016

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோயிலி திமுக எம்எல்ஏ கேபிபி.சாமி, நேற்று காலை வடிவுடை அம்மன் கோயிலுக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த பக்தர்கள், ‘‘கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் தங்களுக்கு குளிக்க வசதி இல்லை. குளத்தில் தண்ணீர் இருந்தால், அதை பயன்படுத்தலாம். ஆனால், திருக்குளமும் வற்றியுள்ளது. எனவே எங்களுக்கு குளியலறை மற்றும் குளியலறை வசதி செய்து தர வேண்டும்’’ என்றனர். இதையடுத்து, எம்எல்ஏ கேபிபி.சாமி, கோயில் முழுவதும் சென்று பார்வையிட்டார். பின்னர், தட்சிணாமூர்த்தி கோயில் அருகில் உள்ள விடுதியிலும் ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து தனது சொந்த நிதியில் இருந்து 10 லட்சத்தில், பக்தர்களுக்கான குளியலறை மற்றும் கழிப்பறை அமைக்கப்படும், பக்தர்களிடம் என உறுதியளித்தார். ஆய்வின்போது, அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி உடன் இருந்தார்.

Also found in: [+]
பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஜெர்மனியில் இருந்து இயந்திரங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 12.7.2018 Dinakaran.com |07 Dec 2016
திருவண்ணாமலை: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்,  திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று  நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி  ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து  வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500  கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 842 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர்.  எனவே, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன்  நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரங்கள் வாங்கப்படுகிறது. அதன்மூலம் 20 ஆயிரம் ...
Also found in: [+]
மலைமீது கழிப்பறை கட்டிய இளைஞர்கள்! மகிழ்ச்சியில் மலைவாழ் மக்கள் 10.7.2018 Junior Vikatan
எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத சொக்கன் அலை கிராமத்திற்கு,  கழிப்பறை கட்டத் தேவையான அனைத்துப் பொருள்களையும் மலைப்பாதையில் 2கிலோமிட்டர் தூரம் சுமந்து சென்றிருக்கிறார்கள்.
Also found in: [+]
ஈ.வி.கே.சம்பத் சாலையில் பாதாள சாக்கடையை புதுப்பிக்க வேண்டும் : பேரவையில் ரவிச்சந்திரன் வலியுறுத்தல் 10.7.2018 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி ரவிச்சந்திரன் (திமுக) துணை கேள்வி எழுப்பி பேசியதாவது: எழும்பூர் சட்டமன்றத் ெதாகுதிக்குப் பட்ட 58 வார்டு ஈ.வி.கே சம்பத் சாலையில் அடுக்குமாடி கட்டிடங்கள் ஏறக்குறைய 1800 வீடுகளுக்கு மேல் உள்ளது. ஏறக்குறை 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அந்த பாதாளச் சாக்கடை பராமரிப்பின்றி உள்ளன. தற்போது, 1500 வீடுகள் அந்த சாலையில் 3 அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல், ஈ.வி.கே சம்பத் சாலையில் பெரியார் திடல் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் உள்ளன. அந்த சாலையில் ஒரு சிறு மழை பெய்தால் கூட கழிவுநீர் கால்வாய்களும், மழைநீர் கால்வாய்களும் நிரம்பி அந்த சாலை துண்டிக்கப்படும் அளவிற்கு இருக்கின்றன. அதே போல் 58 வது வட்டத்தில் உள்ள ரிதர்டன் சாலையில் உள்ள மழைநீர் கால்வாய்களையும், கழிவுநீர் கால்வாய்களையும் புதியதாக புதுப்பித்து தர அரசு ஆவண செய்யுமா?. அமைச்சர் வேலுமணி: சட்டமன்ற உறுப்பினர் கூறிய இடங்களில் எல்லாம் கண்டிப்பாக துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை ...
Also found in: [+]
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டி வரும் கனமழை : கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் உபரி நீர் வெளியேற்றம் 7.7.2018 Dinakaran.com |07 Dec 2016
சேலம்: கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டி வரும் கனமழையால் கபினி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் முதல் வாரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டியது. இதனை தொடர்ந்து மழை படிப்படியாக குறைந்ததை அடுத்து கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் காவிரி் நீர்பிடிப்பு பகுதிகளான கிடுகு, ஹசன் மாவட்டங்களில் மீண்டும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கிடுகு மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து காலை நிலவரப்படி விநாடிக்கு 2,505 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 3,470 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 124 அடி கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையில் தண்ணீர் இருப்பு மாலைப்படி 108 அடியாக உள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து 14,000 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 15,000 கனஅடியாக உள்ளது. 2,284 கனஅடி கொண்ட கபினி அணையில் 2,282 கனஅடிக்கு நீர் உள்ளது. மங்களூர் உள்பட கர்நாடகத்தின் தெற்கு மாவட்டங்களில் கனமழை வெளுத்து ...
Also found in: [+]
தரகம்பட்டி புரவிக்கவுண்டன் குளம் கழிவுநீர் குட்டையாக மாறும் அவலம் 6.7.2018 Dinakaran.com |07 Dec 2016
கடவூர்: கழிவுநீர் குட்டையாக மாறும் தரகம்பட்டி புரவிக்கவுண்டன் குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடவூர் தாலுகாவின் மைய பகுதியாக உள்ளது தரகம்பட்டி. இங்கு தினமும் பல்வேறு அலுவலகங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். மேலும் புரவிகவுண்டன் குளம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த குளத்தில் ஒரு காலத்தில் தேங்கும் மழைநீரை கொண்டு இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தனர். இந்த குளத்தை நம்பி இந்த பகுதி விவசாயிகள் மிளகாய், சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு வந்தனர். ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறி இந்த குளம் கழிவு நீர் தேங்கும் குளமாக மாறிவிட்டது. மேலும் கழிவுகளை இங்கு கொட்டுவதால் நாய்கள் மற்றும் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் இக்குளம் முழுவதிலும் பாலித்தீன் பைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த குளத்தின் அருகிலேயே இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குளத்தில் வீசும் துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இக்குளத்தை உடனே தூர்வார வேண்டும். மேலும், கழிவுநீர் ...
Also found in: [+]
What’s going on in Church Street, and why? 6.7.2018 Citizen Matters, Bengaluru
Church Street was re-designed with TenderSURE design and was customised with cobbled stones. Recent rains wreaked havoc even on Church Street. What does the team that worked on the street design say? »
Also found in: [+]
ஆறு, வாய்க்கால்களை தூர்வாராததால் மழைநீர் வடிய வழியில்லாமல் 1,000 ஏக்கர் குறுவை மூழ்கியது : விவசாயிகள் கவலை 4.7.2018 Dinakaran.com |07 Dec 2016
தஞ்சை: ஆறு, வாய்க்கால்களை தூர்வாராததால் தஞ்சை மாவட்டத்தில் மழைநீர் வடிய வழியில்லாமல் முன்பட்ட குறுவை பதராகும் அவலம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் மின்மோட்டாரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடியை கடந்த மே மாதம் விவசாயிகள் துவங்கினர். தற்போது அனைத்து பயிர்களும் சூழ் பருவத்தில் உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் முன்பட்ட குறுவை சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆறு, வாய்க்கால்களை தூர்வாராததால் வடிய வழியில்லாமல் வயலிலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சூழ் பருவத்தில் இருக்கும் 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்கள் பதராகும் நிலை உருவாகியுள்ளது.எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறு, வாய்க்கால், குளம், ஓடைகளை விரைந்து தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமிநடராஜன் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் குடிமராமத்து என்ற பெயரில் கண் துடைப்புக்காக ஆளுங்கட்சியை ...
Also found in: [+]
கழிவறை துர்நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசுப் பள்ளி ஆசிரியரின் சூப்பர் ஐடியா! 2.7.2018 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
தனியார் பள்ளி மீதான பெற்றோர்கள் மனநிலையை தங்கள் முயற்சிகளால் மாற்றுபவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தாம். அவர்களில் ஒருவர் சேரனூர் நடுநிலைப் பள்ளியின் முருகேசன்.
Also found in: [+]
"தூய்மை இந்தியா மூலம் கழிப்பறை... வீட்டுக்கு 3000 லஞ்சம் வாங்கும் ஒப்பந்ததார்கள்!" 1.7.2018 Junior Vikatan
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வீடுதோறும் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 வழங்கி வருகிறார்கள். இதைக் கட்டுவதற்கு அதிகாரிகளின் பினாமி ஆட்களை  ஒப்பந்ததாரர்களாக...
Also found in: [+]
கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்காததால் ஊட்டியில் கேப்சூல் உறை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை மூடல் 30.6.2018 Dinakaran.com |07 Dec 2016
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருேகயுள்ள சாண்டிநல்லா பகுதியில் தனியார் நிறுவனம் மாத்திரைகளுக்கு பயன்படுத்தப்படும் ஜெலட்டின் என்ற கேப்சூல்உறை தயாரித்து வந்தது. மேலும் கோழி தீவனங்களின் மூலப்பொருளான டை கால்சியம் பாஸ்பேட்டும் இங்கு தயார் செய்யப்படுகிறது. விலங்குகளின் எலும்புகளை கொண்டு இங்கு ெஜலட்டின் தயாரிக்கப்படுகிறது. இதற்காக ஆலையில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உட்பட பல்வேறு அமிலங்கள் பயன்படுத்தப்படுவதால் இங்கு வெளியேறும் கழிவு நீரை சுத்தகரிப்பதில்லை என்றும், கழிவு நீர் நேரடியாக பைக்காரா அணையில் கலந்து அணை நீர் மாசடைவதாக புகார் எழுந்தது.இதனால் இந்த ஆலையில் கழிவு நீரை முழுமையாக சுத்திகரிக்கும் யூனிட் அமைக்க வேண்டும் என பல முறை மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது.ஆனால், இதனை ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளாததால் இறுதியாக கடந்த ஒரு வாரத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட தொழிற்சாலை நிர்வாகம், சுத்தகரிக்கும் இயந்திரம் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்துள்ளதால் இயந்திரம் பொருத்தி, சுத்தகரிப்பு மையம் துவக்க குறைந்தபட்சம் 6 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளனர். இதை ஏற்க மறுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ...
Also found in: [+]
குப்பைகள், கழிவுகளால் நிரம்பி வரும் அவலம் சாக்கடையாக மாறிய சபரி அணை: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் அழியும் பரிதாபம் 26.6.2018 Dinakaran.com |07 Dec 2016
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சபரி அணை கழிவுகள், குப்பையால் சாக்கடையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் ஒன்று பழையாறு ஆகும். சுருளோடு என்ற இடத்தில் உற்பத்தியாகி மணக்குடியில் அரபி கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே வீரப்புலி, குட்டை, பள்ளிக்கொண்டான் அணை, வீரமங்கலம் அணை, சபரி அணை, குமரி அணை, சோழந்தட்டான் அணை, பிள்ளை பெத்தான் அணை, மிஷன் அணை உள்பட 11 அணைகள் உள்ளன. குமரி மாவட்டத்தில்  தென் மேற்கு பருவமழை காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். கடந்த ஆண்டு நவம்பரில் வீசிய ஓகி புயல், அதன் பின்னர் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டது. ஆனால் தடுப்பணைகள் உரிய பராமரிப்பின்றி கிடந்ததால், தண்ணீர்  அனைத்தும் வீணாக கடலில் கடந்தது. பல மில்லியன் கன அடி தண்ணீர் கடலில் கலந்ததாக நீர் வள ஆர்வலர்கள் கூறி உள்ளனர். பழையாறை நம்பி மட்டும் சுமார் 16 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆனால் தடுப்பணைகள் சீரமைக்கப் படாததால் தற்போது மழை  பெய்து வரும் நேரத்தில் கூட, தடுப்பணைகளில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் சபரி அணை ஆகும். ...
Also found in: [+]
சோழிங்கநல்லூர் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் நிறைவு : அமைச்சர் தகவல் 26.6.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் நிறைவு பெறும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த திட்டம் நிறைவு பெற்றால் 37,000 மக்கள் பயன் பெறுவார்கள் என்றார்.

Also found in: [+]
சோழிங்கநல்லூர் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் நிறைவு : அமைச்சர் தகவல் 26.6.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் நிறைவு பெறும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த திட்டம் நிறைவு பெற்றால் 37,000 மக்கள் பயன் பெறுவார்கள் என்றார்.

Also found in: [+]
1 to 20 of 809