User: servelots Topic: tnussp_english
Category: Water
1 new since Nov 22 2019 03:34 IST RSS 2.0
 
20,247 to 20,266 of 23,217    
குளிக்கச் சென்ற இடத்தில் விபரீதம்: குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி 15.7.2017 Tamil Samayam
உத்தரகாண்டில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்களில் இருவர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.உத்தரகாண்டில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்களில் இருவர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
ஊரக மாணவர்களின் மருத்துவர் கனவு சிதைக்கப்பட்டுள்ளது: ராமதாஸ் கருத்து 15.7.2017 Dinakaran.com |07 Dec 2016
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் எது நடக்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் அஞ்சிக் கொண்டிருந்ததோ, அது நடந்து விட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கி அரசு பிறப்பித்த ஆணை செல்லாது என்று உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. இதன்மூலம் ஊரக மாணவர்களின் மருத்துவக் கல்விக்கனவு சிதைக்கப்பட்டுள்ளது. இத்தனை சிக்கலுக்கும் காரணம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு  குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெறும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற தமிழக அரசு தவறிவிட்டது தான். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளிப்பதற்கு இதை ஒரு நிபந்தனையாக முன்வைத்து சாதித்திருக்கலாம். இப்போதும் காலம் கடந்து விடவில்லை. மத்திய அரசுக்கு  அழுத்தம் கொடுத்து நீட் விலக்கு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவது அல்லது சென்னை உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி தீர்ப்பை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீட்டில் சிறந்த வழக்கறிஞர்களை  அமர்த்தி வெற்றி பெறுவதன் மூலமோ மாநிலப் பாடத்திட்ட ...
தொட்டுவிடும் தொலைவில் டோக்லா பீடபூமி-எந்த நேரத்திலும் சீனா தாக்கும்- போர் பீதியில் எல்லை கிராமம்! 15.7.2017 Oneindia - thatsTamil
காங்டாங்: போர் மேகம் சூழ்ந்திருக்கும் டோக்லா பீடபூமியை தொட்டு விடும் தொலைவில் இருக்கும் சிக்கிம் எல்லை கிராமமான குப்புப் மக்கள் கடந்த ஒரு மாதமாக உச்சகட்ட பீதியில் உறைந்து போயுள்ளனர். இந்தியா, பூடான், சீனா ஆக்கிரமித்துள்ள திபெத் சந்திக்கும் முச்சந்திப்பில் உள்ளது பூடானின் டோக்லா பீடபூமி. சிக்கிம் தலைநகர் காங்டாங்கில் இருந்து 68 கிலோ மீட்டர் தொலைவில்
The United States and Europe are on a collision course over Iran 14.7.2017 Washington Post
The United States and Europe are on a collision course over Iran
Also found in: [+]
Assam flood toll climbs to 52; railways joins relief operations 14.7.2017 TOI: India
The flood situation in Assam remained grim on Friday as three deaths were reported and nearly 15 lakh people in 25 districts of the state still affected by the deluge which also inundated more than half of the Kaziranga National Park.
Also found in: [+]
2 Ukrainian tourists fatally stabbed in attack on women at Egyptian resort 14.7.2017 Washington Post: World
The two women were among six targeted at a Red Sea hotel; authorities say a man is in custody in the assault.
Also found in: [+]
வைஃபை, மருத்துவ சேவையுடன் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைகிறது \"அம்மா- இ- கிராமம்\"! 14.7.2017 Oneindia - thatsTamil
சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் "அம்மா -இ-கிராமம்" தேர்வு செய்யப்பட்டு அந்த கிராமத்திற்கு தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி 110ன் கீழ் துறைவாரியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்: கால்நடை பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். ஏற்கனவே
மாவட்டம் தோறும் அம்மா இ-கிராமம் : முதல்வர் அறிவிப்பு 14.7.2017 SamayamTamil
தமிழகத்தில் மாவட்டம் தோறும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட "அம்மா இ-கிராமம்" உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவர் பேரவையின் கடற்கரை யாத்திரை! 14.7.2017 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
தேசிய மீனவர் பேரவை சார்பாக தமிழகம் மற்றும் புதுவை கடற்கரைகளில் விழிப்புஉணர்வு யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரைக் குழுவினர் கடற்கரைக் கிராமங்களில்...
பழனி முருகன் கோயிலில் ரூ.15 கோடியில் பக்தர்களுக்கு புதிய குடிநீர் திட்டம் : அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் 14.7.2017 Dinakaran.com |07 Dec 2016
சென்னை : தமிழகத்தில் 5 கோயில்கள், 6 திருக்குளங்கள் ரூ1.12 கோடியில் சீரமைக்கப்படும் என்று இந்துசமயஅறநிலைத்துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டம் ரூ.10.50 லட்சம் செலவில் விரிவுபடுத்தப்படும் என்றும் பழனி முருகன் கோயிலில் ரூ.15 கோடியில் பக்தர்களுக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். சோளிங்கர் நரசிம்மர் கோயில் குளம், மானாம்பதி சோழியம்மன் கோயில் திருக்குளம் சீரமைக்கப்படும் என்று கூறிய அமைச்சர்,பசுவந்தனை ஆதிகைலாசநாதர் கோயில் குளம் ரூ.34 லட்சத்தில் சீரமைக்கப்படும் என்றார். வெண்குன்றம் கைலாசநாதசாமி கோயில் குளம் ரூ.15 லட்சத்தில் சீரமைக்கப்படும் என்றும் அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் கூறினார். ஆரணி புத்திரகாமேஸ்வரர் கோயிலில் ரூ.2,50 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்று சேவூர்ராமச்சந்திரன் ...
A deadly deluge in the North East, despite normal rains 14.7.2017 TOI: India
The monsoon has been mostly normal in Assam and Arunachal and, in fact, deficit in Manipur. But incessant rains in a few NE districts have led to the Brahmaputra, its tributaries and other big rivers overflowing. Floods have impacted lakhs across 58 districts in the three states...
Also found in: [+]
NE floods: Rescue operations on 'war footing' 14.7.2017 TOI: Home
Floods in northeast have killed at least 83 people and led to the death of three rare one-horned rhinoceros at a national park that has the world's largest concentration of the species. Assam is the worst hit with 53 lives lost so far in floods and landslides with some 20 lakh people displaced.
Also found in: [+]
ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி: இயற்கைக்கு ஆபத்து! 14.7.2017 Dinamani - உலகம் - http://www.dinamani.com/world/
ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அங்கு இயற்கை சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு: கிரண் ரிஜூஜூ மற்றும் பீமா காண்டு ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு 14.7.2017 Dinakaran.com |07 Dec 2016

கவுகாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜூஜூ மற்றும் முதல்வர் பீமா காண்டு இருவரும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டனர்.

அருணாச்சல பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு: கிரண் ரிஜூஜூ மற்றும் பீமா காண்டு ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு 14.7.2017 Dinakaran.com |07 Dec 2016

கவுகாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜூஜூ மற்றும் முதல்வர் பீமா காண்டு இருவரும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டனர்.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து குறைவு 14.7.2017 Dinakaran.com |07 Dec 2016

தர்மபுரி: கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்வரத்து 1600 கனஅடியாக குறைந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 2200கனஅடி வந்த நிலையில் தற்போது 1600 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு வழக்கு.. தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் 14.7.2017 Oneindia - thatsTamil
டெல்லி: முல்லை பெரியாறு வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அனுமதிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வந்த போது, முல்லை பெரியாறு அணைப் பகுதியில் ஆய்வு செய்ய தமிழகத்தை அனுமதிக்க
60 ஆண்டாக பஸ் வசதியின்றி பரிதவிக்கும் கிராம மக்கள் : அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை 14.7.2017 Dinakaran.com |07 Dec 2016
ஸ்ரீமுஷ்ணம்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பெலாந்துறை வாய்க்கால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. வாய்க்கால் பாலம் மிகவும் குறுகிய நிலையில் உள்ளதால் 60 ஆண்டுகளாக பேருந்து போக்குவரத்து நடைபெறாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் தீவிபத்து மற்றும் அவசர காலங்களுக்கு வாகன போக்குவரத்து இல்லாததால் பெரும் இழப்பு ஏற்படுகிறது.  ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட கசப்பை தெரு, தென்பாதி பழனியாண்டவர் கோயில் தெரு, கடலூர் மாவட்ட எல்லை, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ரெட்டிபாளையம், ஸ்ரீராமன், கருக்கை, வல்லம், நாகபந்தல் உள்ளிட்ட கிராம மக்கள் அன்றாடம் தேவைக்கு ஸ்ரீமுஷ்ணம் வரவேண்டி உள்ளது. பள்ளி மாணவர்கள், மருத்துவம், தபால் அலுவலகம், வங்கி, விவசாய விளை பொருட்கள் வாங்க, விற்க உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசு அறிவித்த மினி பஸ் எதுவும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் அறிந்ததில்லை. 60 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தற்போது இப்பகுதி கிராமங்கள் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவை ஆகும். குறுகிய பாலமாக உள்ளதாலும் பாலத்தின் இரு பக்கவாட்டு ...
Also found in: [+]
பள்ளிபாளையம் அருகே ஏரியில் விதிகளை மீறி மண் வெட்டி செங்கல் சூளைக்கு கடத்தல் 14.7.2017 Dinakaran.com |07 Dec 2016
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே எளையம்பாளையம் விதிகளை மீறி மண் வெட்டி செங்கல் சூளைக்கு கடத்தப்படுகிறது. 11 அடிக்கு மேல் வெட்டியதில் தண்ணீர் ஊற்று ஏற்பட்டதால் பணிகள் நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே  எளையம்பாளையம் கிராமத்தில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் எளையம்பாளையம் ஏரியில் தூர்வரும் பணி, கடந்த 5 நாட்களுக்கு முன் தொடங்கியது. 10க்கும் மேற்பட்ட பொக்லைன்  மூலம், நாள்தோறும் 350 லோடு மண் வெட்டியெடுக்கப்பட்டு, டிப்பர் லாரிகளில் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லாமல், பவானி, கொக்கராயன்பேட்டை, ஜலகண்டாபுரம், ஓமலூர் ஆகிய பகுதியில் உள்ள செங்கல் சூளைகளுக்கும், ரியல் எஸ்டேட் நிலங்கள், புதிய வீடு கட்டுபவர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், எளையம்பாளையம் ஏரியில் விதிமுறை மீறி 11 அடி ஆழம் வரை மண் எடுத்ததால், நேற்று ஏரியில் நீர் ஊற்று கிளம்பியது. தகவல் அறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏரிக்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: எளையம்பாளையம் ஏரியில் 3 அடி ஆழத்துக்கு மட்டும் மண் எடுக்க ...
செய்யாறில் கால்வாய் வசதி இல்லாததால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்கும் மழைநீர் 14.7.2017 Dinakaran.com |07 Dec 2016
செய்யாறு: செய்யாறு நகரில் ஆற்காடு சாலையில் ஒழுங்குமுறை  விற்பனை கூடம் அமைந்துள்ளது. இங்கு செய்யாறை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட  கிராமங்களில் இருந்து விவசாயிகள் நெல், மணிலா, எள், உளுந்து,  பாசிப்பயறு என  பல்வேறு விவசாய பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதிக விவசாய  பொருட்கள் கொண்டு வரப்படுவதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூடுதலாக  திறந்தவெளி கிடங்குகள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த 20162017  நிதியாண்டில் வேளாண் பொறியியல் துறை சார்பில் சுமார் ரூ.74 லட்சத்தில் இரண்டு  திறந்தவெளி பரிவர்த்தனை கூட கட்டடம் கட்டப்பட்டது.  தற்போது இக்கட்டிடம்  பயன்பாட்டில் உள்ளது.  இந்த கட்டிடத்தின் முகப்பில் சுமார் ஒரு அடி  ஆழத்திற்கு கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் மழைநீர் தேங்கி நிற்கிறது.  நீர் வடிய எந்தவித வசதியும் இல்லாமல் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த திறந்தவெளி கூடத்தில் நெல்மூட்டைகள் வைக்க முடியவில்லை. போதிய இட வசதி இல்லாததால் விவசாயிகள் கொண்டு வரும் மூட்டைகளை எடை போட முடியாமலும், எடை போட்ட மூட்டைகளை வைத்திருந்து லோடு ஏற்றுவதற்கு  போதிய இடவசதி இல்லாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். ...
20,247 to 20,266 of 23,217