User: servelots Topic: tnussp_english
Category: Water
Last updated: Dec 12 2019 15:21 IST RSS 2.0
 
1 to 20 of 23,567    
சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடிநீருக்கு இன்றி வேறு தேவைக்கு வைகை தண்ணீரை பயன்படுத்தவில்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மணல் திருட்டால் ஆற்றின் கரைகள் சேதம் 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் ஏராளமான நபர்கள் மாட்டு வண்டிகளில் அரசு  அனுமதியின்றி மணல் எடுத்து செல்கின்றனர். கரையோரத்தில் மணல் எடுப்பதால் அதிகளவு பள்ளம் ஏற்பட்டு ஆற்றின் கரை உறுதிதன்மை இழந்து  வருகிறது. இந்த ஆற்றின் அருகே கொக்குப்பாளையம் பகுதியில் விவசாயிகள் நீராதாரம் காப்பாற்ற செக் டேம் கட்டப்பட்டது. இதன் அருகில் எவ்வித பாதிப்பும்  ஏற்படாமல் இருப்பதற்கு கரைகள் பலப்படுத்தப்பட்டது. ஆனால் மணல் அள்ளுபவர்கள் செக் டேமின் அருகிலேயே அதாவது 100 மீட்டருக்குள்ளாகவே மணல் அள்ளுகின்றனர். இதனால் மழை காலத்தில்  வெள்ளம் வரும்போது கரைகள் உடைந்து ஊருக்குள் புகும் சூழ்நிலை உள்ளது. செக் டேமும் உறுதி தன்மை இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதேபோல் பல்வேறு இடங்களில் கரைகளின் அருகிலேயே மணல் எடுத்து வருகின்றனர். எனவே, ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும், மணல்  எடுப்பவர்கள் மீது காடாம்புலியூர், பண்ருட்டி, புதுப்பேட்டை ஆகிய காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றின் கரைகளை  பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை ...
ஊரெல்லாம் கனமழை கொட்டித் தீர்த்தும் திருச்செந்தூரில் குடிநீருக்கு பரிதவிக்கும் பொதுமக்கள்: பேரூராட்சி கவனிக்குமா? 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016
திருச்செந்தூர்: ஊரெல்லாம் மழை பெய்தும் கோயில் நகரமான திருச்செந்தூரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். கோயில் நகரான திருச்செந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக  தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதே போல் திருச்செந்தூரிலும் பெய்த தொடர்மழையால் ஊரே வெள்ளக்காடானது.  தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு குளங்கள்  நிரம்பின. இருப்பினும் திருச்செந்தூரில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. இதனால் மக்கள் குடிநீருக்கு பரிதவிக்கும் அவலத்திற்கு  தள்ளப்பட்டுள்ளனர். இங்குள்ள பாரதியார் தெருவில் குடிநீர் வந்து 12 நாட்களாகிறது. பிடிஆர் தெருவில் 10 நாட்களாகிறது. மேல ரதவீதியில் 45 நாட்களாகியும் குடிநீர்  வரவில்லை. இதையடுத்து இப்பகுதியில் மட்டும் 2 முறை லாரி  மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. சபாபதிபுரம் தெரு, தெற்குரதவீதி,  தெப்பக்குளத்தெரு, ஜீவாநகர், முத்தாரம்மன் கோயில் தெரு, கிருஷ்ணன் கோயில் ...
குன்னூர் அருகே பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லும் சாலை சீரமைப்பு பணி தீவிரம் 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016
குன்னூர்: குன்னூர் பகுதியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உலிக்கல் பஞ்சாயத்திற்குட்பட்ட   ஆனைப்பள்ளம், சடையன் கொம்பை,  சின்னாலக்கொம்பை ஆகிய பழங்குடியினர்   கிராமங்கள் உள்ளது.  அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ள இந்த  கிராமங்களில் குறும்பர் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். கடந்த  40 ஆண்டுகால  போராட்டத்திற்கு பின்பு இந்த பகுதியில் சாலையை சீரமைக்க 1.50  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று   வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலை முழுமையாக அடித்து  செல்லப்பட்டது. மேலும், பல இடங்களில் மண் சரிவு மற்றும்  பாறைகள் விழுந்ததால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  சுற்றியுள்ள பழங்குடியின கிராம மக்கள் தங்களது  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப  முடியாமலும், மேலும், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை 6 கி.மீ. தொலைவு வரை சுமந்து செல்ல  வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.மேலும்,  இந்த பகுதியில் மக்கள் வெளியே வரமுடியாததால் அதிகாரிகள் ரேஷன் உள்ளிட்ட  அத்தியாவசிய  பொருட்களை பழங்குடியினர் வீடுகளுக்கு சென்று  வழங்கி வந்தனர்.  சிறிய அளவிலான வாகனங்கள்கூட செல்ல ...
Also found in: [+]
11 ஆண்டுகளுக்கு பிறகு பூலாங்கன்னி ஏரியில் தண்ணீர் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016
பட்டுக்கோட்டை: தினகரன் செய்தி எதிரொலியால் பூலாங்கன்னி ஏரியில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பியது. இதனால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளது.பட்டுக்கோட்டை அடுத்த முதல்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது பூலாங்கன்னி ஏரி. இந்த ஏரி மிகவும் பழமை வாய்ந்த ஏரி. இந்த ஏரி 15 முதல் 20 ஏக்கர்  பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு நைனான்குப்பம் தாய் வாய்க்கால் மூலம் தான் தண்ணீர் வந்து சேரும். இந்த ஏரி மூலம் பூலாங்கன்னி கிராமத்தில்  175 ஏக்கர் பாசன வசதி பெறும். நைனான்குப்பம் தாய் வாய்க்கால் மூலம் 1,563,37 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.இந்த பூலாங்கன்னி ஏரிக்கு நாடியம்மன் கோயில் பின்புறம் உள்ள சிவக்கொல்லை பகுதியில் ஓடும் நைனான்குப்பம் தாய் வாய்க்கால் மூலம் தான்  தண்ணீர் வந்து சேரும் என்ற நிலைமை இருக்க தமிழக அரசோ அல்லது சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகமோ  இதுவரை பூலாங்கன்னி ஏரியில் தண்ணீர் நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்தாண்டு வழக்கத்தைவிட இதுவரை டெல்டா மாவட்டத்தில் மழையும் கூடுதலாகவே பெய்தும்கூட பூலாங்கன்னி ஏரியில் சிறிதளவு தண்ணீர்  மட்டுமே உள்ளது. சிவக்கொல்லை பகுதியில் ஓடும் ...
சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடிநீருக்கு இன்றி வேறு தேவைக்கு வைகை தண்ணீரை பயன்படுத்தவில்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நதிநீர் பங்கீடு பற்றிய தமிழக - கேரள அதிகாரிகள் குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: நதிநீர் பங்கீடு பற்றிய தமிழக - கேரள அதிகாரிகள் குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் தொடங்கியது. இந்நிலையில்  பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், பாண்டியாறு - புன்னபுழா திட்டம் குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அருகே கிராமமக்களை தாக்கிய சிறுத்தையை சுட்டுகொன்ற வனத்துறை 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016
அமரேலி: 15-க்கும் மேற்பட்ட நபர்களை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுகொன்ற உள்ளனர். குஜராத் மாநிலம் அமரேலி அருகே 20-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் கால்நடைகளை தாக்கிய சிறுத்தையை நேற்று இரவு வனத்துறையினர் சுட்டுகொன்ற பிடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கால்நடைகளை கடித்து குதறிய அந்த சிறுத்தை வந்துள்ளது. இதனை அடுத்து கிராம மக்கள்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் தனியாக நடமாட கிராம மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அமரேலி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாட்டுத் தொழுவம் அருகே யூகலிப்டஸ் தோப்பில் சிறுத்தை பதுங்கியிருந்ததை கிராமமக்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினருக்கு கிராமமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கு இருள்சூழ்ந்ததால் வனத்துறையினர் அந்த சிறுத்தையை சுட்டுக் கொன்றுள்ளனர்.மேலும் அந்த பகுதியில் நடமாடிய  சிறுத்தைகள் சிலவற்றை வனப்பகுதிக்குள் விரட்டியதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளது ...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்கன்னி ஏரி 11 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016

தஞ்சை: சன் செய்தி எதிரொலியாக கால்வாய் தூர்வாரப்பட்டதால் 11 ஆண்டுகளுக்கு பின் பூலாங்கன்னி ஏரி நிரம்பியது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்கன்னி ஏரி 11 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளது. 11 ஆண்டுகளுக்கு பின் ஏரி முழுவதுமாக நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்கன்னி ஏரி 11 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016

தஞ்சை: சன் செய்தி எதிரொலியாக கால்வாய் தூர்வாரப்பட்டதால் 11 ஆண்டுகளுக்கு பின் பூலாங்கன்னி ஏரி நிரம்பியது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்கன்னி ஏரி 11 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளது. 11 ஆண்டுகளுக்கு பின் ஏரி முழுவதுமாக நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தென்மாநிலங்களில் பாசனத்தை மேம்படுத்த கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகளை இணைக்க திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016
பெங்களூரு: ‘‘தென்மாநிலங்களில் விவசாயிகள், பொதுமக்களுக்கு சீரான தண்ணீர் வசதி  ஏற்படுத்துவதற்காக கோதாவரி, காவிரி மற்றும் கிருஷ்ணா  நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது,’’ என மத்திய நீர்ப்பாசன துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். கர்நாடகாவில்  இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய தேசிய நெடுஞ்சாலை மற்றும்  நீர்ப்பாசனத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெங்களூரு சர்வதேச பொருட்காட்சி  மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்து வரும், ‘எக்ஸ்கான்-2019’  மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: நாட்டில்  தற்போது பெட்ேரால் உள்ளிட்ட எரிபொருள் பயன்படுத்துவதின் மூலம்  சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்து வருகிறது. இதை தவிர்க்க வேண்டுமானால்  சுத்திகரிக்கப்பட்ட இயற்கை எரிபொருளை (எல்என்ஜி) பயன்படுத்த முன்னுரிமை  கொடுக்க வேண்டியது அவசியம். அதை செயல்படுத்தும் வகையில் தேசியளவில்  பெட்ரோல், டீசல் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களுக்கு தடை விதித்து  வருவதுடன் அதற்கு மாற்றாக சிஎன்ஜி, எல்என்ஜி எரிபொருள் பயன்படுத்த  முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. ...
Also found in: [+]
அமைச்சர் தொகுதியான வண்ணாரப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016
* மக்களுக்கு நோய் பாதிப்பு  * போராட்டம் நடத்த முடிவுதண்டையார்பேட்டை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் சொந்த தொகுதியான வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெரு, பரசுராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் 48வது வார்டுக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெரு, பரசுராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தெருக்களில் 5000க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் பல்வேறு நோய் தாக்குதலால் அவதிப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் கடந்த ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் ...
Also found in: [+]
22வது வார்டு காவாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் 12.12.2019 Dinakaran.com |07 Dec 2016
புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், 22வது வார்டு புழல், காவாங்கரை பகுதி சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், திருமலை நகர், கன்னடப்பாளையம், சக்திவேல் நகர், மகாவிர் கார்டன், மெர்சி நகர், தமிழன் நகர், திருநீலகண்ட நகர், காஞ்சி அருள் நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகர் பகுதியில் உள்ளன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை பணி இதுவரை துவங்கப்படாததால் வீடுகள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக, காவாங்கரை தனியார் மீன் மார்க்கெட்டில் சேரும் கழிவுகள் அங்குள்ள தொட்டியில் இருந்து வெளியேறி ஜிஎன்டி சாலையின் சர்வீஸ் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு கழிவுநீரை தாண்டி கடந்து செல்கிற அவல நிலை உள்ளது. லேசான காற்று அடித்தால் கூட ஜிஎன்டி சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் ...
Also found in: [+]
சேதுபாவாசத்திரம் பகுதியில் கஜா புயலின் போது வீசப்பட்ட தென்னை மரங்கள் ஏரியில் மிதப்பதால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் 11.12.2019 Dinakaran.com |07 Dec 2016
சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் பகுதியில் கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்கள் ஏரிகளில் மிதக்கிறது. இதனால் தண்ணீர் மாசடைவதால் தென்னைகளை பொதுப்பணித்துறை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சேதுபாவாசத்திரம் பகுதியில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி அதிகாலை கரை கடந்த கஜா புயல் கோரதாண்டவமாடியது. இதனால் இந்த பகுதியில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள், மா, பலா, தேக்கு என காட்டு மரங்கள், தொழிற்சாலைகள், படகுகள் சேதமடைந்தது. மேலும் சேதுபாவாசத்திரம் பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்த ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாய்ந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்த முடியாமல் 6 மாதங்கள் வரை தென்னை விவசாயிகள் கஷ்டத்திற்கு ஆளாகினர். கோடை காலங்களில் தண்ணீரின்றி பட்டுப்போன தென்னை மரங்களை வெட்டி துண்டு வைத்து திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு லாரிகளில் ஏற்றி சென்ற வியாபாரிகள் கஜா புயலுக்கு பின் இந்த பகுதியை திரும்பிக்கூட பார்க்கவில்லை. வசதி படைத்தவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே மரங்களை வெட்டி வெளியூர் வியாபாரிகளுக்கு இலவசமாக வழங்கி அப்புறப்படுத்தினர். வசதியற்ற விவசாயிகள் பல்வேறு ...
உச்சநீதிமன்றம் உத்தரவுபடி எவ்வித மாற்றமும் இன்றி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு 11.12.2019 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவுபடி எவ்வித மாற்றமும் இன்றி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. * '2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது; எனவே, டிச.9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவுபடி எவ்வித மாற்றமும் இன்றி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு 11.12.2019 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவுபடி எவ்வித மாற்றமும் இன்றி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. * '2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது; எனவே, டிச.9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது 11.12.2019 Dinakaran.com |07 Dec 2016

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சூரணம் கிராமத்தில் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கர்ணன் என்பவரை அவரது மகன் பிரகாஷ் ராஜ் கட்டையால் தாக்கினார். படுகாயமடைந்த கர்ணன் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது 11.12.2019 Dinakaran.com |07 Dec 2016

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சூரணம் கிராமத்தில் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கர்ணன் என்பவரை அவரது மகன் பிரகாஷ் ராஜ் கட்டையால் தாக்கினார். படுகாயமடைந்த கர்ணன் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருகிறது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை 11.12.2019 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட கோனாம்பேடு பகுதியில் ஏராளமான குளங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் தற்போது ஓரளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆனால் இப்பகுதியில் உள்ள குளங்களில் சிலர் சட்டவிரோதமாக டேங்கர் லாரிகள் கொண்டு தண்ணீரை திருடி அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கான நீராதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதையடுத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் உள்ளன. எனவே கோனாம்பேடு பகுதிகளில் உள்ள குளங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்கவும், ஆக்கிர மிப்புக்களை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி கடந்த ஆண்டு அந்த கிராம பொது நல சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால் மாவட்ட ...
காரைக்குடி அருகே மழைநீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெற்பயிர் சேதம் 11.12.2019 Dinakaran.com |07 Dec 2016

சிவகங்கை: காரைக்குடி அருகே செவரக்கோட்டை கிராமத்தில் மழைநீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெற்பயிர் அழிந்து நாசமானது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

1 to 20 of 23,567