User: servelots Topic: Sanitation_categorized
Category: Sanitation_categorized :: Pollution
Last updated: Oct 17 2018 02:39 IST RSS 2.0
 
1 to 20 of 775    
பிப்.15 முதல் ஏப்.15ம் தேதி வரை தமிழகத்தின் எந்த பகுதியிலும் மலையேற்றம் கூடாது: அரசு உத்தரவு 17.10.2018 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை மலையேற்றம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் குரங்கனியில் காட்டு தீவிபத்து ஏற்பட்டபோது மலையேற்றத்தில் ஈடுபட்ட பலர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.  இதையடுத்து, மலையேற்றம் செல்வோர் பாதுகாப்பு, வன வளம் மற்றும் காப்பு காடுகள், சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மலையேற்றத்திற்கான புதிய விதிகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் அறிவித்துள்ளார்்.  இந்த விதிகள், ‘தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிர் பகுதிகள் (மலையேற்றத்திற்கான கட்டுப்பாடுகள்) விதி’கள் 2018 என்று அழைக்கப்படும். இதன்படி,  ிபிிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் மலையேற்றம் செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டும்தான் மலையேற்றம் செல்ல வேண்டும். மலையேற்றம் செய்யும் குழுவில்  குறைந்தபட்சம் 5 பேர் இருக்க வேண்டும், அதிகபட்சம் 15 பேர் இருக்க வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மலையேற்றம் மேற்கொள்ள வேண்டும். பத்து ...
Also found in: [+]
பூ ஒன்று தொழிலானது! 9.10.2018 Dinakaran.com |07 Dec 2016
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரிலிருந்து சரியாக 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பஹுண்டி என்கிற கிராமம். இந்த கிராமமே 24 மணி நேரமும் பூ நறுமணத்தால் பூரித்துக் கொண்டிருக்கிறது. காரணம், அங்கிருக்கும் ‘ஹெல்ப் அஸ் க்ரீன்’ என்று பெயர் சூட்டப்பட்ட கட்டிடம். இங்கே தினமும் ஏராளமாக பூக்கள் சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நண்பர்களான அங்கித் அகர்வால் மற்றும் கரண் ரஸ்தோகி என்கிற இரு இளைஞர்கள்தான் பூவை வைத்து கவிதை எழுதி காலத்தை வீணாக்காமல், அதை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றியிருக்கிறார்கள்.அங்கித் அகர்வாலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். “என்னோட சொந்த ஊர் புனே. நான் காலேஜ் வரைக்கும் அங்கேதான் படிச்சேன். ஐடி என்ஜினியரிங் முடிச்சிட்டு புதிய கண்டுபிடிப்பு மற்றும் சுயதொழில் தொடர்பான முதுநிலைப் படிப்பும் படிச்சேன். ஒரு ஐடி நிறுவனத்தில்தான் வேலை. செக்குமாடு மாதிரி சுத்திக்கிட்டே இருக்கிற இந்த வேலை கொஞ்சம் போரடிச்சது. லைஃபுன்னா அட்வெஞ்சர் வேணும்னு நெனைச்சேன். சொந்தத் தொழில் தொடங்கினாதான் சவால் இருக்கும். அதுக்குன்னு திடீர்னு வேலையை ...
Also found in: [+]
அதிக இழுவைத்திறன் கொண்ட பேட்டரி வாகன உற்பத்திக்கு புதிய தொழில்நுட்பம் : ஐஐடியுடன் கைகோர்த்து ஆய்வுப்பணிகள் தீவிரம் 9.10.2018 Dinakaran.com |23 Aug 2016
புதுடெல்லி: காலத்தின் கட்டாயமான மின்சாரத்தில் செயல்படும் மோட்டார் வாகனங்களின் காலத்துக்கேற்ற புதிய தொழில் நுட்பங்களை அளிக்க ஐஐடிக்களின் உதவியை மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நாடியுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மாசு போன்றவையும் மாற்று எரிபொருளின் தேவையை உணர்த்தி வருகின்றன. பூமியில் இருந்து தொடர்ந்து  இயற்கை வளத்தை எவ்வளவு நாட்களுக்கு எடுக்க முடியும். இதற்கு மாற்றாக மரபு சாரா எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டும். குறிப்பாக மாசு ஏற்படுத்தாத, சப்தம் இல்லாமல் ெசயல்படும் மின் வாகனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. இதையடுத்து மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி கார்கள், ஆட்டோக்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் இவை சொற்பம்பாதான். தற்போது சாலையில் வலம் வரும் பேட்டரி வாகனங்கள் சமதள சாலைகளில் மட்டுமே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கரடு முடனான, மலைப் பாதைகள், சரிவு பாதைகளில் செல்லும் வகையில் மின் சக்தியில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் ...
Also found in: [+]
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணம் உயராது 8.10.2018 Dinakaran.com |07 Dec 2016
கரூர்:  ``டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது’’ என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று, கரூர் மாவட்டம் வாங்கலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது, அவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்படும் கூடுதல் நிதிசுமை குறித்து முதல்வரிடம் தெரிவித்து நிதி கேட்கப்பட்டுள்ளது. இதற்காக பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ₹12,800 கோடி நிதி பெற்று வழங்கப்பட்டுவிட்டது. ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே நிதி வழங்க வேண்டியதிருக்கிறது. விரைவில் வழங்கப்படும். தொழிற்சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு அவர்களது சங்க வளர்ச்சிக்காக இருக்கலாம். தூண்டுதலின்பேரில் இவ்வாறு செய்கின்றனர். தீபாவளிக்காக 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது. ஸ்பேர் பஸ்களும் தயாராக இருக்கிறது. கண்டக்டர் இல்லாத பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. எனினும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பேருந்துகளில் சில குறைபாடுகள் ...
Also found in: [+]
ஐநா பொதுச்செயலாளர் வழங்கினார் பிரதமர் மோடிக்கு புவி பாதுகாவலர் விருது 4.10.2018 Dinakaran.com |07 Dec 2016
புதுடெல்லி: ஐநா.வின் சுற்றுச்சூழலுக்கான மிக உயரிய ‘புவி பாதுகாவலர்’ விருதை பிரதமர் மோடிக்கு இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் வழங்கினார். இந்தியாவில் சூரிய மின்சக்தியை அதிகரிப்பதன் மூலம் பருவநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வு காண மோடி தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக, அவர் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட்டு  வருகிறார். மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காகவும் அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இந்த சேவைகளை பாராட்டும் வகையில், ஐநா.வின் மிக உயரிய விருதான `சாம்பியன் ஆப் எர்த்’ எனப்படும் ‘புவி பாதுகாவலர்’ விருதுக்கு கடந்த வாரம் மோடி தேர்வு செய்யப்பட்டார். மோடியுடன், பிரான்ஸ் அதிபர்  இமானுவேல்  மெக்ரோனும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், மோடிக்கு இந்த விருதை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ்  வழங்கினார்.நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பருவநிலையும், பேரிடரும் கலாசாரத்துடன் தொடர்பு உடையவை. இவற்றை கலாசாரத்தில் இருந்து வேறுபடுத்த முடியாது. சுத்தமான, பசுமையான ...
Also found in: [+]
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து சென்னையில் மத்திய குழு கருத்து கேட்டது: எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் குவிந்ததால் பரபரப்பு 25.9.2018 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து மத்திய குழு சென்னையில் நேற்று மக்களிடம் கருத்து கேட்டது. ஆலை ஆதரவாளர்களும்  எதிர்ப்பாளர்களும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100வது நாள் நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு  ஸ்டெர்லைட் ஆலையை அதிரடியாக மூடியது.  இதனைதொடர்ந்து வேதாந்தா நிறுவனம், டெல்லியில் உள்ள மத்திய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட்  ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விஞ்ஞானி சதீஷ், சி.கர்கோட்டி,  மத்திய மாசு கட்டுபாடு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி  3 பேர் கொண்ட குழு கடந்த 22ம் தேதி முதல் ஸ்டெர்லைட் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தி மனுக்களை பெற்றனர். இதனைதொடர்ந்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பசுமைதீர்ப்பாயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் வேதாந்தா ...
Also found in: [+]
தலைதூக்கும் அபாயம் 22.9.2018 Dinakaran.com |07 Dec 2016
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு அந்த பகுதியை சுற்றி வசித்து வரும் மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுக்காற்றால் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு  உயிர்கொல்லி நோய்கள் பரவுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து அந்த ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை ஒடுக்க போலீசார் எடுத்த முயற்சி கலவரமாக மாறி தூப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.  இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதுடன் ஆலைக்கு சீல் வைத்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இந்நிலையில் ஆலையில் இருக்கும் இயந்திரங்கள் விலை உயர்ந்தவை என்றும் அதை பராமரிக்காமல் விட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.எனவே இயந்திர பராமரிப்பு பணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு ஆலையில் உள்ள நிர்வாக கட்டிடத்தை பயன்படுத்த ...
Also found in: [+]
செப்டெம்பர் 21 - உலக அமைதி நாள் 21.9.2018 4TamilMedia News
அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் ...
Also found in: [+]
ஒரே வழி் 21.9.2018 Dinakaran.com |07 Dec 2016
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கிறது. விரைவில் 100 ரூபாயை எட்டிவிடக்கூடும் என்று வாட்ஸ் அப்பில் விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசாவது வரி குறைக்குமா என்றால், மழை எதிர்பார்க்கும்  தார் பாலைவனமாகத்தான் இருக்கிறது. சரி பெட்ரோல், டீசல் விலை ஏறிக் கொண்டிருக்கிறது; இன்று முதல் கொஞ்சம் நடந்து பார்ப்போம் என்று யாராவது செயலில் இறங்கியது உண்டா?பெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறது? அதன் பயன்பாடு அதிகம். அதே நேரத்தில் சர்வதேச காரணிகளும், குறைக்கப்படாத வரிகளும் சேர்கிறது. இப்போதுள்ள நிலையில், பக்கத்து பெட்டிக் கடைக்கு போக வேண்டும் என்றால்  கூட, டூவீலரில்தான் பயணிக்கும் நிலை உள்ளது. இவ்வளவு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த பின்னரும் கூட, வாகனங்களின் பயன்பாடு சிறிது கூட குறையவில்லை என்பது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றின் தர  அளவை பார்த்தாலே விளங்கும்.பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்றால், அதன் பயன்பாடு குறைய வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படுவது என்றால், அதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, நிலைமையை சமாளிக்க முடியும். ஆனால், இது அரபு  நாடுகளில் இருந்தும் கொண்டு வர வேண்டியுள்ளது. ஈரானிடம் ...
Also found in: [+]
ஸ்டெர்லைட் விவகாரம் மத்திய அரசின் நிலத்தடி நீர்வாரிய அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: 2 வாரத்தில் பதிலளிக்க வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவு 12.9.2018 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் காரணம் இல்லை என்று மத்திய நிலத்தடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர்  மாசு அடைவது குறித்து மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்த  அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடி நகரில் நிலத்தடிநீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தாக்கல் செய்த அறிக்கைக்கு தடைவிதிக்க  கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி சுப்பையா, நீதிபதி பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை நிலத்தடி ...
Also found in: [+]
தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கை! - மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம் 11.9.2018 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Also found in: [+]
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நீர் ஆய்வு: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு 9.9.2018 Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய நிலத்தடி நீர்வள வாரியத்தின் அறிக்கை இருப்பதாகக் கூறி தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Also found in: [+]
பேட்டரி பஸ் குறித்த கண்காட்சியில் பங்கேற்க போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமெரிக்கா செல்கிறார் 9.9.2018 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: பேட்டரி பஸ் தொடர்பான கண்காட்சியில் பங்கேற்பதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று லண்டன் செல்கிறார். தமிழகத்தில் மின்சார பேருந்துகளை இயக்க இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சி-40 என்ற அமைப்புடன் அரசு போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னையில் மின்சார பஸ்கள்  இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் அனைத்து நாடுகளிலும் மின்சார பஸ்களை இயக்க சி-40 அமைப்பு வலியுறுத்தி வருகிறது.மின்சார பஸ்கள் இயக்குவதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் சாத்தியக்கூறுகளை சி-40 அதிகாரிகள் ஆய்வு செய்து கொடுப்பார்கள். அந்த வகையில், சி-40 அமைப்பினர் கடந்த மாதம் சென்னைக்கு வந்து ஆய்வு  நடத்தினார்கள். அடையாறு பணிமனையில் நேரடி ஆய்வு நடந்தது. அப்போது முதல்கட்டமாக எந்தெந்த வழித்தடங்களில் மின்சார பஸ்கள் இயக்கலாம், சார்ஜர் அமைப்பது, தூய்மையான புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பெறுவது  உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.பின்னர் அவர்கள் தலைமை செயலகத்தில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், மின்சார ...
Also found in: [+]
ரூ. 1.2 லட்சம் கோடி சேமிக்கலாம் : கொள்கை உருவாக்க, 'நிடி ஆயோக்' வலியுறுத்தல் 9.9.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
கூவமாக மாறிவரும் வைகை ஆறு : நிலத்தடி நீரும் நஞ்சாகும் அபாயம் 5.9.2018 Dinakaran.com |07 Dec 2016
மதுரை: வைகை ஆற்றில் 40 இடங்களில் மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனை கழிவுநீர் கலப்பதால் வைகை கூவமாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் நிலத்தடி நீரும் நஞ்சாக மாறுகிறது. வைகை அணை முதல் ராமநாதபுரம் வரை 250 கி.மீ. தூரம் ஓடும் வைகை ஆறு, மதுரை மாநகர் பகுதியில் கோச்சடை முதல் விரகனூர் மதகு அணை வரை 12 கி.மீ. தூரம் மாசுபட்டு சீரழிகிறது. ஆற்றில் மாசுபடுத்தினால் அபராதம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக  மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீரை 40 இடங்களில் வைகை ஆற்றுக்குள் சட்ட விரோதமாக சங்கமம் செய்வது அதிர்ச்சிக்குரியது.ஆறு மாசுபடாமல் காக்க கழிவுநீரை அவனியாபுரம், சக்கிமங்கலத்திற்கு குழாய் மூலம் கொண்டு சென்று சுத்திகரிக்கும் திட்டம் 2010ல் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் உருக்குலைந்து வருகிறது. அங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு குழாய் மூலம் அனுப்பப்பட்டு வந்த கழிவுநீரில் 50 சதவீதம் மீண்டும் ஆற்றில்  கலக்கிறது. இது தவிர அரசு ராஜாஜி மருத்துவமனை கழிவுநீரும் ஆற்றில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆழ்வார்புரத்தில் பந்தல்குடி கால்வாய் மூலம் வரும் பாதாள சாக்கடை் நீர் அருவி போல் கொட்டுகிறது. அடிக்கடி ...
Also found in: [+]
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு; சுப்ரீம் கோர்ட் மறுப்பு 4.9.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
அதிக காற்று, ஒலி மாசை ஏற்படுத்தும் ஆட்டோக்கள் 2.9.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக நீதிபதி தருண் அகர்வால் நியமனம் 31.8.2018 Makkal Kural
புதுடெல்லி,ஆக.31– ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு […]
Also found in: [+]
ஆடி அமாவாசையின்போது தாமிரவருணியில் நீர் மாசு குறைவு: சுற்றுச் சூழல் விஞ்ஞானி தகவல் 30.8.2018 Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/
ஆடி அமாவாசையின் போது தாமிரவருணி ஆற்றில் நீர் மாசுபாடு குறைந்துள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
Also found in: [+]
மறுசுழற்சி செய்யலாமே: நிலம், நீர், காற்றை பாதிக்குது 'குப்பை'. முறையான 'சேகரிப்பு' அவசியம் 30.8.2018 Dinamalar.com |ஆகஸ்ட் 23,2016

...

Also found in: [+]
1 to 20 of 775