User: iihs_chennai Topic: tnussp_tamil
Category: Miscellaneous
2 new since Jan 16 2019 14:23 IST RSS 2.0
 
1 to 20 of 15,199    
எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் | போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் மேலும் பதற்றம் 16.1.2019 மாலை முரசு
சபரிமலை ஐயப்பன் கோயில் செல்ல முயன்ற பெண்கள் இரண்டுபேரை, போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இருப்பினும், போராட்டங்களையும் மீறி, கேரளாவைச் சேர்ந்த பெண்கள் உட்பட சிலர் ஐயப்பனை தரிசித்தனர். இதுபோன்ற சம்பவங்களால், சபரிமலை பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவிவருகிறது. இந்த நிலையில், […]
Also found in: [+]
கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் எங்கே? பரபரப்பு தகவல் 16.1.2019 செய்திகள்
கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில தேர்தலில் 222 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.
Also found in: [+]
கனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம் 15.1.2019 tamil.webdunia.com
சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கனடா நாட்டு நபரின் குடும்பம் தங்களின் மிக மோசமான அச்சம் தற்போது நடந்துவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளனர்.
Also found in: [+]
வல்லூர் அனல் மின்நிலையத்தை திறக்கலாம்: ஐகோர்ட் உத்தரவுக்கு தடை 15.1.2019 Dinakaran.com |07 Dec 2016
புதுடெல்லி:  தமிழகத்தில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் உள்ள 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வல்லூர் அனல் மின்நிலைய  நிர்வாகம் எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில்,“மத்திய அரசின் உத்தரவை மீறி சதுப்பு  நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாகவும், அனல் மின் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும்  குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வல்லூர் அனல் மின்நிலையத்திற்கு தடை விதிக்கப்படுகிறது இதையடுத்து, வல்லூர் அனல் மின்நிலையம் மூடப்பட்டது.இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த டிவிஷன் பெஞ்ச் அமர்வு நீதிபதிகள், தடையை வரும் 18ம் தேதி வரை நீட்டித்தும்.மேலும், சுற்றுச்சூழல்துறை ஆலையை திறப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்தால் அதன்பிறகு நீதிமன்றம் முடிவெடுக்கும் எனவும் கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் ...
Also found in: [+]
மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி - மார்க்சிஸ்ட் நிபந்தனை 15.1.2019 Dinakaran.com |07 Dec 2016
கொல்கத்தா: ‘‘காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மாநில அளவில் இருந்து தொடங்கப்பட வேண்டும். தேசிய அளவில் அதற்கு சாத்தியமில்லை’’ என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.மக்களவை தேர்தலுக்காக தேசிய அளவில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆளும் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியிடம், ‘‘பாஜவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க காங்கிரசுடன், மார்க்சிஸ்ட் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை ஏன்?’’ என கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு யெச்சூரி, ‘‘ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் சூழல் வெவ்வேறாக உள்ளது. எனவே, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் மாநில அளவில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இப்போதைக்கு தேசிய அளவிலான கூட்டணிக்கு வாய்ப்பில்லை. மக்களவை தேர்தல் முடிவு அறிவிப்புக்குப் பிறகு, பாஜ.வுக்கு எதிரான மதச்சார்பற்ற, ஜனநாயக முன்னணி அமையும் என எதிர்பார்க்கிறேன்.   ...
Also found in: [+]
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது காற்றுமாசு 40 சதவீதம் குறைந்தது: மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல் 15.1.2019 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: குறைந்த ஈரப்பதம், மிதமான வெப்பநிலை மற்றும் மிதமான காற்றின் வேகம் காரணமாக  நுண்துகள்கள் அளவு சராசரியாக கடந்த ஆண்டை விட காற்றுமாசு 40 சதவீதம் குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு  வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதாவது: சென்னையில் 15 மண்டலங்களிலும் வாகனங்கள் மூலமும், கையேடுகள் வழங்கியும், பொது அறிவிப்பு செய்தும் பொதுமக்களிடையே புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னையில் போகி  பண்டிகைக்கு முன்தினம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 36 குழுக்கள் அமைத்து காவல் துறையுடன் இணைந்து அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் இரவு ரோந்து பணி மேற்கொண்டது. இதேபோல்,  போகிப்பண்டிகையின்போது சென்னையில் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்ய 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்தது. இந்த ஆய்வின்படி கந்தக-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு அனைத்து 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவுக்கு (80 மைக்ரோகிராம்/கனமீட்டர்) இரண்டு நாட்களிலும் குறைவாக  இருந்தது ...
Also found in: [+]
பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக 1000 மரங்கள் வெட்டப்பட்டதால் ஒடிசாவில் சர்ச்சை! 14.1.2019 Dinakaran.com |07 Dec 2016
புபனேஷ்வர்: பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக 1000 மரங்கள் வெட்டப்பட்டுள்ள சம்பவம் ஒடிசாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாளை ஒடிசா வரும் பிரதமர் நரேந்திர மோடி குர்தா-பாலிங்கர் இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மேலும், அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவுள்ளார். பிரதமா் மோடி ஹெலிகாப்டரில் வரும் நிலையில், அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க ஏதுவாக பிரத்தியேக ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. இந்த பணிக்காக அப்பகுதியில் இருந்த 1000க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு 2.26 ஏக்கர் நிலத்தில் ரயில்வே துறை சார்பில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இதில் தற்போது ஹெலிபேட் அமைப்பதற்காக, 1.25 ஏக்கர் நிலத்தில் இருந்த மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய இயற்கை ஆர்வளர் சுற்றுச்சூழல் ஆர்வலர் பிஸ்வாஜித் மொகந்தி, ஒரு மரத்தை வெட்ட வேண்டுமென்றாலே வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டும் என்ற சூழல் அமலில் உள்ளபோது ஆயிரம் மரங்களை இவர்கள் எப்படி அனுமதியின்றி வெட்டியுள்ளனர் என்று ...
Also found in: [+]
கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் மும்பையில் ஹோட்டலில் தங்கி இருப்பதாக அமைச்சர் சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு 14.1.2019 Dinakaran.com |07 Dec 2016
கர்நாடகா: கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் மும்பையில் ஹோட்டல் ஒன்றில் பாஜக தலைவர்களுடன் தங்கி இருப்பதாக அம்மாநில அமைச்சர் சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது முதலாகவே அமைச்சரவை பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் இரு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் பதவி கேட்டு போர்க் கொடி தூக்குவதால் கர்நாடக அரசியல் களத்தில் அவ்வப்போது பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. கர்நாடகாவில் அண்மையில் 8 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்னர். இதில், பதவி கிடைக்காத காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுமட்டுமின்றி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிஹோளி அதிருப்தி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அவர் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி வந்தது.இந்தநிலையில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அவர் மும்பையில் பாஜக தலைவர்களுடன் தங்கி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான ...
Also found in: [+]
சாதுவான ஆசிரியர்... மிரட்டும் ப்ளஸ் டூ மாணவர்கள்... திருப்பத்தூர் பள்ளியில் நடக்கும் அட்ராசிட்டி 14.1.2019 Junior Vikatan
திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சாதுவான ஆசிரியர் ஒருவரை, ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் அசிங்கப்படுத்தி கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also found in: [+]
தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் இதற்குத் தடை ! 14.1.2019 tamil.webdunia.com
தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Also found in: [+]
சீனா, பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 44 சாலைகள் அமைக்க திட்டம் மத்திய அரசு ரூ.26,440 கோடி ஒதுக்குகிறது 14.1.2019 Dinakaran.com |07 Dec 2016
புதுடெல்லி: இந்திய-சீன எல்லைப் பகுதியில் ராணுவ பயன்பாட்டுக்காக ரூ.21,000 கோடி செலவில் 44 புதிய சாலைகளை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா, சீனா இடையே ஜம்மு காஷ்மீரில் இருந்து அருணாச்சல பிரதேசம் வரை 4,000 கிமீ தொலைவுக்கு எல்லைப் பகுதி அமைந்துள்ளது. கடந்தாண்டு, சிக்கிம் மாநிலம் டோக்லாம் பகுதியில் அமைந்துள்ள எல்லைப் பகுதியில் சாலை அமைக்க சீன ராணுவம் முயற்சித்தபோது, இந்திய ராணுவம் அதை நேருக்கு நேர் சந்தித்து எதிர்த்தது. இதனால், பதற்றமான சூழல் நிலவியது. அடிக்கடி எல்லை மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எல்லையை ஒட்டி சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியை சீனா மேற்கொண்டது.இதற்கு பதிலடியாக இந்தியாவும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய பொதுப் பணித்துறையின் 2017-18ம் நிதியாண்டுக்கான ஆண்டறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், சீனா, பாகிஸ்தான் எல்லை பகுதிகளை இந்திய ராணுவம் விரைவாகவும், எளிதாகவும் சென்றடைய கூடிய வகையில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 44 சாலைகள் அமைக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அறிக்கையில், ‘இந்திய-சீன எல்லையில் மூலோபய ...
Also found in: [+]
அரசுக்கு தெரியுமா? 14.1.2019 Dinakaran.com |07 Dec 2016
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி டிசம்பரில் நிறைவு பெறுவது வழக்கம். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு 104 டிஎம்சி கிடைக்கும். இவ்வாண்டு பருவமழை இயல்பைவிட 24%  குறைவான அளவு பெய்துள்ளது. இதன் விளைவு, தமிழகத்தின் பல மாவட்டங்கள் இப்போது வேளாண்மை அடிப்படையில் வறட்சியை எதிர்கொண்டுள்ளன. வரும் ஏப்ரல், மே மாதங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படக்கூடும்.பொதுப்பணித்துறை நீர்வள ஆதார மைய தகவலின்படி இவ்வாண்டு  பருவமழை பற்றாக்குறையால் தமிழகத்தில் மொத்தமுள்ள 14,098 ஏரிகளில் 1821 ஏரிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. தமிழகத்தில் உள்ள 89  அணைகளில் நீர்மட்டம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. 192 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 பிரதான அணைகளில் தற்போது 104 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் குடிநீர், பாசனம் மற்றும் இதர  தேவைகளுக்கு ஆண்டுக்கு 350 டிஎம்சி தண்ணீர் வரை தேவைப்படுகிறது.இந்த புள்ளி விபரங்களை கொண்டு கணக்கிடும்போது நடப்பு சாகுபடியும் பொய்க்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் அதால பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. தமிழக  வேளாண்மையின் ...
Also found in: [+]
டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் 13.1.2019 மரு‌த்துவ‌ம்
நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது.சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன ...
Also found in: [+]
சிப்ஸ், சாக்லெட் பாக்கெட்களுக்கும் தடை - அமைச்சர் அறிவிப்பு 13.1.2019 Dinakaran.com |07 Dec 2016
ஈரோடு: `பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், சாக்லெட் போன்றவைகளுக்கு விரைவில் தடை ஏற்படுத்தப்படும்’  என்று அமைச்சர் கருப்பணன் அறிவித்தார்.சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், ஈரோட்டில் நிருபர்களிடம் ேநற்று கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், சாக்லெட் போன்றவைகளுக்கு விரைவில் தடை ஏற்படுத்தப்படும். பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருட்களை உற்பத்தி செய்ய அரசு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. மாநில அளவில் 273 பெரிய நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்கள் மாற்று பொருள் தயாரிப்புக்காக இதுவரை அரசை நாடவில்லை. அவ்வாறு நாடினால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். போகி பண்டிகையை புகையின்றி கொண்டாட, மாசு கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு கருப்பணன் ...
Also found in: [+]
உலகின் முதல்நிலைப் பணக்காரரான அமேசன் நிறுவன இயக்குனர் ஜெஃப் பெசோஸ் சிக்கலில்! 12.1.2019 4TamilMedia News
உலகின் முதல் நிலைப் பணக்காரராக புளூம்பேர்க் பணக்காரப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அமேசன்.காம் தாபகர் மற்றும் இயக்குனரான ஜெஃப் பெசோஸ் தற்போது கடும் சிக்கலில் ...
Also found in: [+]
யாடு -2 என்ற ஆய்வு கலம் நிலவின் தரையில் இறங்கி ஆய்வை மேற்கொள்ள தொடங்கியது 12.1.2019 Dinakaran.com |07 Dec 2016

சீனா: நிலா குறித்த புதிய தகவல்களை சீனா ஆய்வுகலம் அனுப்பத் தொடங்கி உள்ளது. நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள அந்நாடு அனுப்பிய சேஞ்ச் -4 என்ற விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் இறங்கி உள்ளது. அதில் இருந்து இறக்கப்பட்ட யாடு -2 என்ற ஆய்வு கலம் நிலவின் தரையில் இறங்கி ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த இரு கலங்களின் பணியை, கியூகியோ என்ற மற்றொரு விண்கலம் தொடர் நேரலை செய்து வருகிறது. இப்படி நிலாவில் மூன்று விண்கலங்களும் செயல்படும் புகைப்படங்கள், மற்றும் காட்சிகளை சீன விண்வெளி ஆய்வகம் வெளியிட்டுள்ளது. நிலவின் மறுபக்கத்தில் உள்ள பெருங்குழியில் ஆய்வு நடைபெறுவதாகவும், இந்த ஆய்வில், நிலாவின் தரையில் என்னென்ன தனிமங்கள் உள்ளன, அங்கு கதிர் வீச்சு எப்படி உள்ளது, சூழல் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து வருவதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Also found in: [+]
கிறிஸ்துமஸ் முடிந்த பின்னர் வீணாகும், மரங்களை விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்துவதை ரஷ்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 12.1.2019 Dinakaran.com |07 Dec 2016

ரஷ்யா: விற்பனையாகாமல் தேங்கிப் போன கிறிஸ்துமஸ் மரங்களை ரஷ்ய விலங்கியல் காட்சி சாலை உணவுப் பொருளாக மாற்றி உள்ளது. அந்நாட்டின் மாஸ்கோ நகரில் உள்ள விலங்கு காட்சி சாலையில், விலங்குகளுக்கு கிறிஸ்துமஸ் மரங்களை வாங்கி அதிகாரிகள் கொடுத்து வருகின்றன. மனித குரங்குகள், மலையாடுகளுக்கு கிறிஸ்துமஸ் மரங்கள் உணவாக மாறி உள்ளன. ஆனால், பனிக்கரடிகள், யானைகள் போன்றவற்றுக்கு அவை வெறும் விளையாட்டு பொருளாகி உள்ளன. கிறிஸ்துமஸ் மரங்களை விட பிஸ்கட்டுகள், ரொட்டிகள், கேரட்டுகளையே யானைகள் விரும்பி உண்கின்றன. கிறிஸ்துமஸ் முடிந்த பின்னர் வீணாகும், மரங்களை விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்துவதை ரஷ்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

Also found in: [+]
சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையில் குழு அமைப்பு: மதுரை கிளை 12.1.2019 Dinakaran.com |07 Dec 2016

மதுரை: சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் மற்றும் கல்வி மையத்தின் பேராசிரியர் வி.வி.ராமன் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியை பிரியாதேவிதார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வனப்பகுதிகளில் யூகலிப்டஸ், சில்வர் ஓக் மரங்களை அப்புறப்படுத்தக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு அபாயத்தையும், சவாலையும் ஏற்படுத்தும் வகையில் மனு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also found in: [+]
சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையில் குழு அமைப்பு: மதுரை கிளை 12.1.2019 Dinakaran.com |07 Dec 2016

மதுரை: சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் மற்றும் கல்வி மையத்தின் பேராசிரியர் வி.வி.ராமன் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியை பிரியாதேவிதார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வனப்பகுதிகளில் யூகலிப்டஸ், சில்வர் ஓக் மரங்களை அப்புறப்படுத்தக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு அபாயத்தையும், சவாலையும் ஏற்படுத்தும் வகையில் மனு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also found in: [+]
ஏஎப்டி தொழிலாளர்கள் கழுதையிடம் மனு தரும் போராட்டம் 12.1.2019 மாலை முரசு
புதுச்சேரி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி, முதலியார்பேட்டையில் ஏஎப்டி பஞ்சாலை தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நேரத்தில் ஊதியம் நிலுவை வைத்துள்ளதால் பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 5 மாத ஊதிய நிலுவைத் […]
Also found in: [+]
1 to 20 of 15,199