User: iihs_chennai Topic: tnussp_tamil
Category: Hygiene
Last updated: Jan 24 2019 02:14 IST RSS 2.0
 
1 to 20 of 6,424    
கேரள வெள்ளத்தில் மூழ்கி கெட்டுப்போனவை - திருச்சியில் பாலிஷ் போட்ட 100 லோடு அரிசி பறிமுதல் 24.1.2019 Dinakaran.com |07 Dec 2016
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ₹30 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் இடிந்தன. விவசாய நிலங்கள் சேதமடைந்தன. வெள்ளப் பெருக்கின்போது கேரள நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விற்பனை செய்வதற்காக எர்ணாகுளம் பெரும்பாவூரில் உள்ள 2 அரிசி மில்களில் ைவக்கப்பட்டிருந்த 100 லோடுக்கு மேல் அரிசி மூட்டைகள் தண்ணீரில் மூழ்கி கெட்டுப்போனது.இந்த அரிசியை கால்நடைகளுக்கு கூட கொடுக்கக் கூடாது என்றும், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த அரிசியை திருச்சியை சேர்ந்த சில தனியார் மில் உரிமையாளர்கள் வாங்கிச்சென்றனர். பின்னர் கெட்டுப்போன இந்த அரிசியை பட்டை தீட்டி மீண்டும் கேரள நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு விற்பனை செய்ய தயாராக வைத்திருப்பதாக தகவல் வெளியானது.இதுதொடர்பாக விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டார். விசாரணையில், திருச்சி துறையூரில் உள்ள ஒரு அரிசி மில்லில் கெட்டுப்போன அரிசியை சுத்தம் செய்து கேரளாவுக்கு அனுப்ப தயாராக வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தமிழக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு ...
Also found in: [+]
'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' 23.1.2019 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நவீன கப்பலை வடிவமைத்து 12 வயது சிறுவன் அசத்தல் 23.1.2019 Dinakaran.com |07 Dec 2016
மும்பை : மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் வகையில் கப்பல் ஒன்றை வடிவமைத்து அசத்தி இருக்கிறான். புனே நகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஹஸீக் காஸி தான் இந்த நவீன கப்பலை வடிவமைத்து இருக்கிறான். சென்டரிபீட்டல் ஃபோர்ஸ் எனப்படும் மைய நோக்கு விசையால்  இயங்கும் இந்த கப்பல் கடலில் இருந்து கழிவுகளை சேகரித்து தரம் வாரியாக பிரிக்கும் தன்மையுடையது என்கிறார் ஹஸீக் காஸி. இதனால் கடல் வாழ் உயிர்களுக்கு பாதிப்பு இருக்காது என்கிறார் ஹஸீக் காஸி. தண்ணீர் கப்பலுக்குள் உறிஞ்சப்படும் போது  அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் உயிரினங்களை மீண்டும் கடலுக்குள் தள்ளிவிடுவமாம். கடலில் கலக்கும் கழிவுகளை அகற்றும் ஹஸீக் காஸியின் புதிய திட்டம் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த ஹஸீக் காஸி பேட்டியில் கூறியுள்ளதாவது,'ஒரு நாள் நான் கைகளை கழுவும் போது நீர் செல்லும் போக்கை கவனித்தேன்; அப்போது, உலகில் உள்ள ஆழமான கடல்களுக்கு கீழே சுத்தம் செய்யவும், கடல் வாழ் உயிரினங்களை காப்பாற்றவும் எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது; அப்போது தண்ணீரின் ...
Also found in: [+]
கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு 22.1.2019 Dinakaran.com |07 Dec 2016

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி பாண்டித்துரை மற்றும் முருகன் ஆகியோர் பலியாகினர்.

Also found in: [+]
கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு 22.1.2019 Dinakaran.com |07 Dec 2016

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி பாண்டித்துரை மற்றும் முருகன் ஆகியோர் பலியாகினர்.

Also found in: [+]
குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள சமையலறை குறிப்புகள்..! 22.1.2019 மரு‌த்துவ‌ம்
சாறு பிழிந்த எலுமிச்சம்பழத் தோலைத் தூக்கி எறிந்துவிடாமல் உருளைக்கிழங்கு வேகவைக்கும்போது அதோடு சேர்த்து வேகவையுங்கள். உருளைக்கிழங்கு பொரியல் கமகமவென்று மணம் வீசும்.
Also found in: [+]
சொன்னதை செய்தாரா உங்கள் (நீலகிரி) எம்.பி கோபாலகிருஷ்ணன்...? 22.1.2019 Dinakaran.com |07 Dec 2016
இசையோடு சேராத பாட்டு - இன்பமில்லை. பகுத்தறிவு இல்லாத பார்வை-பயனில்லை. சொல் ஒன்று; செயல் வேறு- இது, நாட்டுக்கும் கேடு; வீட்டுக்கும் கேடு. இதில், உங்கள் தொகுதி எம்பி. எப்படி? 2014 தேர்தலில் சொன்னதை செய்தாரா? தொகுதியை கவனித்தாரா? வளமாக்கினாரா?அல்லது தன்னை வளமாக்கினாரா? இதை பற்றி அலசுவதுதான் இந்த பகுதி. காரணம், மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே பாக்கி. அதில், உங்கள் தொகுதியின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கப் போகும் சக்தி நீங்கள்தான். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!’ இனி, முடிவு உங்கள் கையில்!சுய விவரம்பெயர்    சி.கோபாலகிருஷ்ணன் கல்வி    எம்ஏ., எம்.பில்., எல்.எல்.பி., ெதாழில்    வக்கீல்பிறந்த இடம்    குன்னூர்பிறந்த தேதி    17.02.1962வயது    57தந்தை பெயர்    சின்னராஜ்தாயார் ெபயர்    லோகம்மாள்மனைவி    சுசீலாகுழந்தைகள்    இல்லைமுகவரி    69, முத்தாளம்மன் தெரு, ஓட்டுப்பட்டரை, குன்னூர், நீலகிரி மாவட்டம்.மக்களவை செயல்பாடு:வருகை பதிவேடு    78% கேட்ட கேள்விகள்    696 பங்கேற்ற விவாதம்    482014ல் காட்டிய சொத்து கணக்குஅசையும் சொத்துகோபாலகிருஷ்ணன்    ₹20.24 லட்சம்மனைவி சுசீலா    ₹14.16 லட்சம்அசையா ...
Also found in: [+]
ரயில் தூய்மை குறித்து பயணிகளிடம் சர்வே : தெற்கு ரயில்வேக்கு சொந்தமான ரயில்கள் தேர்வு 22.1.2019 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: இந்திய ரயில்வே சார்பில் ‘ரயில் தூய்மை சர்வே-2018’ எடுக்கப்பட்டது. அதில், ரயில்வே ஸ்டேஷன் சுத்தம், துப்புரவு நிலை, கழிப்பறை வசதி, சீட், ஜன்னல் உள்ளிட்டவற்றின் நிலை குறித்து பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த ஆய்வு மொத்தம் 209 ரயில்களில் நடத்தப்பட்டது. பிறகு அதுகுறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதில், பிரிமியம் பிரிவில் சென்னை சென்ட்ரல் - மைசூரு சதாப்தி ரயில், 1000க்கு 906 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தது. சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி ரயில் 873 புள்ளிகள் பெற்று 9வது இடம் பிடித்தது. சென்னை - நிஜாமுதீன் ரயில் 764 புள்ளிகள் ெபற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பிரிமியம் பிரிவில் பெங்களூரு - எர்ணாகுளம் மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை ரயில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை முறையே 789, 792 புள்ளிகள் பெற்று பிடித்துள்ளன.ஜன் சதாப்தி ரயில்களில் திருவனந்தபுரம் - கோழிக்கோடு, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ரயில்கள் முறையே 766, 738 புள்ளிகள் பெற்றுள்ளன. மேலும், முக்கிய மெயில் மற்றும் விரைவு ரயில்கள் பிரிவில் 7 ரயில்கள் தெற்கு ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் திருப்பதி - ஜம்மு ரயில் முதலிடம் ...
Also found in: [+]
``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..!"- நார்த்தாமலை சிவனடியார்கள் குமுறல் 21.1.2019 Junior Vikatan
நார்த்தாமலையில் சுனை லிங்கத்தை மீட்டவர்கள் பூஜை செய்யக் கூடாது என்று தற்போது தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது சிவனடியார்களை கொதித்தெழச் செய்துள்ளது. 
Also found in: [+]
இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது ஏன் தெரியுமா...? 21.1.2019 மரு‌த்துவ‌ம்
தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் இந்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
Also found in: [+]
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த ஆமணக்கு எண்ணெய்....! 21.1.2019 மரு‌த்துவ‌ம்
ஆமணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செல்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன. சிற்றாமணக்கிற்கும் பேராமணக்கிற்கும் உள்ள முக்கிய வேற்றுமை அவற்றின் கொட்டைகளின் அளவைப் பொறுத்தது.
Also found in: [+]
2020 மார்ச் மாதத்துக்குள் 100 சதவீதம் கங்கை நதி தூய்மை: மத்திய மந்திரி நிதின் கட்காரி 21.1.2019 Dinakaran.com |07 Dec 2016

நாக்பூர்: 2020 மார்ச் மாதத்துக்குள் 100 சதவீதம் கங்கை நதி தூய்மை ஆகும் என்ற நம்பிக்கை உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக ரூ.26 ஆயிரம் கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது என கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். இதுவரை கங்கையை சுத்தம் செய்யும் பணி 10 சதவீதம் மட்டுமே நடந்து உள்ளது எனவும் கூறினார். இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 30 முதல் 40 சதவீதம் சுத்தம் செய்யும் பணி நிறைவடையும் எனவும் கூறினார். மேலும் 2020 மார்ச் மாதத்துக்குள் 100 சதவீதம் கங்கை நதி தூய்மை ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார். கங்கை மட்டுமன்றி அதன் கிளை நதிகளையும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என தெரிவித்தார்.

Also found in: [+]
சுகாதாரமில்லாத துரந்தோ ரயில்: அதிர்ச்சி ஏற்படுத்திய சர்வே 20.1.2019 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: சுகாதாரமில்லாமல் இயக்கப்படும் ரயில்கள் குறித்து பயணிகளிடம் நடத்திய சர்வேயில் துரந்தோ ரயிலுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. சுகாதாரமான ரயிலில் சகாப்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சுகாதாரமாக மக்கள் பயணம் செய்ய, தூய்மையாக உள்ள 2018ம் ஆண்டுக்கான ரயில் சர்வே பிரிமியம், நான் பிரிமியம் என 210 ரயில்களில் நடத்தப்பட்டது. அதில் முக்கியமாக ரயிலில் உள்ள கழிவறைகள், இருக்கைகளின் சுத்தம், பெட்களின் பராமரிப்பு குறித்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளிடம் பல்வேறு கேள்விகளின் மூலம் நேரடியாக சர்வே மேற்கொள்ளப்பட்டது. ரயில்வேத்துறையில் இந்த சர்வே முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது.  கழிவறைகளின் தூய்மை, தூய்மை செய்பவர்களின் பணிகள், பெட் எப்படி சுத்தம் செய்யப்படுகிறது, குப்பைத்தொட்டிகள் சரியாக வைக்கப்படுகிறதா என்ற கேள்விகளை கொண்ட படிவத்திற்கு பயணிகள் மதிப்பெண் வழங்கும் வகையில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. அதில், 1000 மதிப்பெண்ணிற்கு புனே முதல் செகந்திராபாத் வரை செல்லும் சகாப்தி ரயிலுக்கு 916, ஹவுரா-ராஞ்சி சகாப்தி ரயிலுக்கு 914, சென்னை சென்ட்ரல்- மைசூர் சகாப்தி ரயிலுக்கு 906 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு முதல் 3 இடத்தை ...
Also found in: [+]
கங்கை நதியை சுத்தம் செய்ய 26 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் – அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை 20.1.2019 மாலை முரசு
2020 மார்ச் மாதத்துக்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்தார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசினார்.கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக 26 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். இதுவரை கங்கையை சுத்தம் செய்யும் பணி 10 சதவீதம் மட்டுமே நடந்து உள்ளதாகவும் இந்த ஆண்டு மார்ச் […]
Also found in: [+]
உலகம் பலவிதம் 20.1.2019 Dinakaran.com |07 Dec 2016
சீனர்களுக்காக அழகிய ஊதுபத்தி:சீனாவின் பாரம்பரிய நாட்காட்டியான லூனாரின்படி, புத்தாண்டு தினம் அடுத்த மாதம் 5ம் தேதி பிறக்க உள்ளது. புத்தாண்டு தினத்தில், சீனர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். அதற்காக, வியட்நாமின் ஹனாய் மாநிலத்தில் உள்ள குயாங் காவ் கிராமத்தில் சிவப்பு வண்ணத்தில் அழகிய ஊதுபத்திகள் செய்யும் பணியில் பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.பலத்தை காட்டும் தைவான்:‘தைவானை மீண்டும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கு தேவைப்பட்டால் ராணுவமும் பயன்படுத்தப்படும்’ என சீனா மிரட்டல் விடுத்த நிலையில், தைவானின் தாய்சங் பகுதியில் 2 நாள் போர் ஒத்திகை நடத்தப்பட்டது. சீனாவுக்கு தங்களின் ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் நடந்த இப்போர் பயிற்சியில் இலக்குகளை நோக்கி சீறிப்பாயும் ஏவுகணை. எத்தகைய போர் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தைவான் அதிகாரிகள் தெரிவித்தனர்.கால்நடை அணிவகுப்பு:அமெரிக்காவின் கொலோரடோ மாகாணத்தின் டென்வர் நகரில், தேசிய மேற்கத்திய கால்நடை கண்காட்சி கடந்த 1906ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கண்காட்சியையொட்டி, ‘கவ் பாய்’ வேடமணிந்தவர்கள் குதிரையில் ...
Also found in: [+]
அண்ணா பல்கலையில் நாளை முதல் 3 நாளுக்கு சர்வதேச ஆவணப்பட விழா 20.1.2019 Dinakaran.com |07 Dec 2016
சென்னை : ஜனவரி 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்பட விழா நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் கல்வியியல் தகவல் பரிமாற்றக் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் சர்வதேச ஆவணபட விழா நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக இந்த நிகழ்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக கல்வி பல்லூடக ஆய்வு மையத்தின் இயக்குனர் கவுரி கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 3 சர்வதேச ஆவணப்பட விழாவில் பங்கேற்பதற்காக தேசிய, சர்வதேச அளவில் 197 ஆவணப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னேற்றம், சுற்றுப்புறச்சூழல், மனிதஉரிமை, தூய்மை இந்தியா ஆகிய 4 பிரிவுகளில் ஆவணப்படங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல்பரிசு ₹50,000 வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 முதல் 15 ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள டிஏஜி அரங்கத்தில் நடைபெறும் 3 நாள் ஆவணப்பட விழாவை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.இந்த ஆவணப்பட விழா 2016ம் ஆண்டு நவம்பரில் சண்டிகரில் நடந்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ...
Also found in: [+]
உடலில் உள்ள நச்சுகளை அகற்றும் உணவு முறைகள்...!! 19.1.2019 மரு‌த்துவ‌ம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளதோடு, குடலைச் சுத்தம் செய்யும் தன்மையும் வாழைப்பழத்திற்கு உள்ளது. எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள்.
Also found in: [+]
கருவேலம் மண்டியுள்ள மயானத்தை சீரமைக்க வேண்டும் 18.1.2019 Dinakaran.com |07 Dec 2016
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் கீழத்தெருவில் உள்ள மயானத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் கீழத்தெருவில் ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 80 குடியிருப்புகள் உள்ளன. இந்த கீழத்தெருவின் அருகில் இவர்களுக்கான மயானம் உள்ளன. இந்த மயானத்தை இறந்தவர்களை புதைக்க மட்டும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த மயானம் செல்லும் பாதை மற்றும் மயானம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் மண்டி உள்ளே செல்லமுடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மயானத்தை பார்வையிட்டு இதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருக்கோஷ்டியூரை சேர்ந்த திமுக ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் கண்ணன் கூறுகையில், ‘‘இந்த மயானத்திற்கு செல்லும் பாதையில் ஊராட்சியின் மூலம் ஏற்கனவே சிமெண்ட் சாலை போடப்பட்டது. ஆனால் தற்போது அந்த பாதையில் கருவேல செடிகள் முளைத்தும், குப்பைகள் நிறைந்தும் ...
Also found in: [+]
சபாஷ் எடப்பாடி… – போகி மாசு 40 % குறைவு! 15.1.2019 tamil.webdunia.com
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு போகிப் பண்டிகையின் போது பொருட்களை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை 40 சதவீதம் குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வரியம் தெரிவித்துள்ளது.
Also found in: [+]
ராமநாதபுரத்தில் அதானி குழுமத்தின் சூரிய மின்னாற்றால் நிலையத்தால் குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் பாதிப்பு 14.1.2019 Dinakaran.com |07 Dec 2016
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி குழுமத்திற்கு சொந்தமான 648 மெகாவாட் சூரிய மின்னாற்றால் நிலையம் செயல்பட்டு வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின் நிலையத்தில் உள்ள சூரிய மின் தகடுகளில் படியும் தூசியை கழுவி சுத்தம் செய்ய நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயல்பாகவே வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால் கமுதி வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிக ஆழத்திற்கு சென்று விட்டது. இத்தகைய சூழலில் அதானி குழுமத்திற்கு சொந்தமான சூரிய மின்னாற்றால் நிலையத்திற்கு தேவையான தண்ணீர் நாள்தோறும் நிலத்தில் இருந்து ஆழ்துழாய் கிணறுகள் மூலம் எடுக்கப்படுகிறது.இதனால் குடிநீருக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். நிலத்தை கொடுத்துவிட்டு எவ்வித வசதியுமின்றி துண்பப்படும் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ...
Also found in: [+]
1 to 20 of 6,424