User: iihs_chennai Topic: tamil_tnussp_iihsmaa
Category: sanitary-workers
Last updated: Dec 17 2018 09:05 IST RSS 2.0
 
1 to 20 of 818    
அடிப்படை பிரச்னைகளில் அலட்சியம் நகராட்சி அலுவலர்கள் மீது அதிருப்தி ; ஸ்ரீவி.,யில் சரியும் அ.தி.மு.க., ஓட்டு வங்கி 17.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
செலவு செய்ய நிதி இல்லை; கேட்க பிரதிநிதிகளும் இல்லை தமிழகத்தில் தள்ளாடும் உள்ளாட்சிகள் 17.12.2018 Dinakaran.com |07 Dec 2016
ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும் உள்ளாட்சி தேர்தல் 2016ம்  ஆண்டு அக்டோபர் மாதம் நடந்திருக்க வேண்டும். ஆனால், தங்களுக்கு செல்வாக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அரசு தொடர்ந்து  இழுத்தடித்து இன்று வரை நடத்தாமல் இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்தபின் தான் தேர்தல் என்று சொல்லி வந்த அரசுக்கு, அது இல்லாமல் பழையபடியே நடத்துங்கள் என்றும் கூட ஐகோர்ட் சலுகை அளித்தது.  ஆனாலும், தேர்தல் நடத்த அரசு தயாரில்ைல. இதன் விளைவுகள் என்னென்ன தெரியுமா? * தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள். மாவட்ட பஞ்சாயத்து என 13,362 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.* உள்ளாட்சிகளுக்கு 2017-18க்கு  ₹3,340 கோடியை மத்திய அரசு ஒதுக்க இருந்தது. * இதில் 1390 கோடியைத்தான் அளித்தது. அதன் பின் எந்த நிதியும் வரவில்ைல. * வர வேண்டிய 1950 கோடி நிதியை தேர்தல் நடத்தினால் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறி விட்டது. * இது கிடைக்காததால் வெகுவாக பாதிக்கப்படுவது துப்புரவு உட்பட அடிப்படை பணியாளர்கள்  தான். கோவை மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்காததால் 500 துப்புரவு பணியாளர்கள் நீக்கப்பட்டனர் என்பது ஒரு உதாரணம்  தான். * ...
Also found in: [+]
ஊதியத்தை கூட தர முடியாமல் உள்ளாட்சிகள் திணறல்: கே.ஆர்.கணேசன், உள்ளாட்சி துறை ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் 17.12.2018 Dinakaran.com |07 Dec 2016
தமிழ்நாட்டில் உள்ளாட்சி ேதர்தல் நடத்தாத காரணத்தால் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை மாநில அரசு பெற முடியவில்லை. இதனால், மாநில அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த நிதியை உள்ளாட்சி  அமைப்புகளுக்கு வழங்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ₹6 ஆயிரம் கோடி நிதி கிடைக்கவில்லை.இதனால் புதிய சாலைகள் அமைத்தல், புதிய பாலம் கட்டுதல், சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால்களை சீரமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால்  அடிப்படையான பணிகளான  குப்பைகள் எடுத்தல், குடிநீர் விநியோகம், புதிய மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி  கட்டுவது உள்ளிட்ட நடைமுறை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் டெங்கு  உள்ளிட்ட நோய்களை ஒழிக்க போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை. நோய்களை கட்டுபடுத்துவதற்கான மருந்துகளும் வாங்கப்படவில்லை.மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றனர். மேலும் தற்காலிக  மற்றும் ஒப்பந்த ...
Also found in: [+]
புழல் ஏரிக்கரையில் குப்பை கொட்டிய 2 லாரிகள் பறிமுதல் 16.12.2018 Dinakaran.com |07 Dec 2016
புழல்: புழல் ஏரியின் கரையில் குப்பைகள் கொட்டிய, 2 லாரிகளை பிடித்து வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  சென்னை புழல் ஏரி மதகு அருகில் காலியாக உள்ள இடத்தில், குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் கொட்டக்கூடாது என எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி லாரிகளின் மூலம் இங்குஅடிக்கடி குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் துர்நாற்றம் காரணமாக பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மழை பெய்யும்போது குப்பைகள் நீரில் அடித்து செல்லப்பட்டு அருகில் உள்ள புழல் ஏரியில் கலப்பதால் நாளுக்கு நாள் தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின்படி புழல் ஏரி பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என்று, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவு பிறப்பித்தார். இதற்கான எச்சரிக்கை பலகையும் ஏரியின் அருகே வைக்கப்பட்டது. ஆனால், கலெக்டரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, தொடர்ந்து குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவள்ளூர் ...
Also found in: [+]
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் சேதுபதி நகர் வடக்கு மக்கள் 11.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம் 11.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
பங்களிப்பு ஓய்வூதிய நிதி ரூ.27.51 கோடி எங்கே? மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் புலம்பல் 10.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
திருவொற்றியூர் 6வது வார்டு சார்லஸ் நகரில் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர் 10.12.2018 Dinakaran.com |07 Dec 2016
* கண்டுகொள்ளாத அதிகாரிகள்* போராட்டம் நடத்த மக்கள் முடிவுதிருவொற்றியூர்: திருவொற்றியூர் 6வது வார்டு சார்லஸ் நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் கீழ்நிலை தொட்டி அமைத்து கழிவு நீரை தேக்கி பின்னர் லாரிகளின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்கள் குளிப்பது, துணி துவைப்பது ஆகிய அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கழிவு நீர் தெருவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கால்வாயில் விடப்படுகிறது. இந்த திறந்தவெளி கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் சரியாக பராமரிப்பதில்லை. இதனால், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு சேறும், சகதியுமாக உள்ளது. கழிவுநீர் சீராக செல்லாமல் கால்வாயில் தொடர்ந்து தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகமாக சுற்றுவட்டார மக்கள் தூங்க முடியாத நிலை உள்ளது. மேலும் கொசுக்களால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. பல குறுகிய தெருக்களில் கால்வாய் திறந்தே கிடப்பதால் அவ்வழியாக சைக்கிளில் செல்லும் சிறுவர்கள் கால்வாயில் விழுந்து, காயமடைகின்றனர். இந்த கால்வாயை தூர்வாரி சீரமைத்திட வேண்டும் என்று திருவொற்றியூர் மண்டல ...
Also found in: [+]
அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர் 9.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு : சென்னையில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் 5.12.2018 Dinakaran.com |07 Dec 2016
சென்னை : மாநகராட்சி துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சியில் 15,000க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 3 மண்டலங்கள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனை கண்டித்து சென்னையில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியாரிடம் ஒப்படைத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று துப்புரவு தொழிலாளர்கள் கூறியுள்ளனர். மேலும் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்றும், காலியாக உள்ள துப்புரவு பணியாளர்கள் இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதமே டெண்டர் விடவிருந்த நிலையில், துப்புரவு  தொழிலாளர்களின் எதிர்ப்பால் இந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து தொழிலார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் ...
Also found in: [+]
அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு 4.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர் 1.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் துப்புரவு பணியாற்றியவர்களுக்கு ஊக்க தொகையுடன் கிப்ட் பாக்ஸ்: அமைச்சர் வேலுமணி பேட்டி 30.11.2018 Dinakaran.com |07 Dec 2016
நாகை: புயல் பாதித்த மாவட்டங்களில் பணியாற்றிய வெளிமாவட்ட  துப்புரவு ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊக்க தொகையுடன் 16 வகையான கிப்ட் பேக் வழங்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி நேற்று அளித்த பேட்டி: உள்ளாட்சி துறை சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை  மாவட்டங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் துப்புரவு பணியாளர்கள் 12,176 பேர் மற்றும்  உள்ளூர் பணியாளர்கள் என மொத்தம் 23,584 பேர் பணியாற்றியுள்ளனர்.  வெளியூரில் இருந்து வந்து பணியாற்றிய துப்புரவு பணியார்களை பாராட்டும் வகையில் உள்ளாட்சி துறை சார்பில் சிறப்பு ஊக்க தொகையாக ரூ.1000 வழங்கப்படும். மேலும் அரிசி, பெட்சீட், சேலை, லுங்கி உட்பட 16 வகையான  கிப்ட் பேக் வழங்கப்படும்.  இதற்கான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில்  இதுவரை 22,96,416 பேர் வேலை கொடுக்கப்பட்டு குறுக்கு சாலை மரங்கள், வீட்டு தோட்ட மரங்கள் மற்றும் மர இலைகள் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு ...
Also found in: [+]
அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு 28.11.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
துப்புரவு பணிகளை தனியார் மயமாக்கும் விவகாரம் டெண்டர் திறப்பு ஒத்திவைப்பு 28.11.2018 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: துப்புரவு பணிகளை தனியாருக்கு வழங்கும் டெண்டரை ஒத்திவைப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து  மாநகராட்சி ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் 9,10 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணிகளை செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய மண்டலங்களிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி டெண்டர் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்தையில் துப்புரவு பணிகளை தனியாரிடம் கொடுப்பதை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில் அந்த 8 மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும், அவற்றை கண்காணிக்கவும் ஒரு அமைப்பை தேர்தெடுக்க தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த ...
Also found in: [+]
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் தூய்மை பணி சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு மதிப்பூதியம் : கலெக்டர் வழங்கினார் 27.11.2018 Dinakaran.com |07 Dec 2016
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவின்போது தூய்மைப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அண்ணாமலையார் கோயில் பிரசாதம் மற்றும் மதிப்பூதியம் வழங்கி கவுரவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி ஆம்பூர், குடியாத்தம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, அரக்கோணம், வந்தவாசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, திருவண்ணாமலை நகரில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், தீபத்திருவிழாவின்போது துப்புரவு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு திருவண்ணாமலை நகராட்சி சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம் வரவேற்றார். விழாவில், 645 துப்புரவு பணியாளர்களுக்கு அண்ணாமலையார் கோயில் பிரசாதம் மற்றும் மதிப்பூதியம் 1000 ஆகியவற்றை கலெக்டர் வழங்கி கவுரவித்தார். அப்போது அவர் கூறுகையில், திருவண்ணாமலை தீபத்திருவிழாவின்போது நீங்கள் சிறப்பான முறையில் துப்புரவு பணியாற்றினீர்கள். உங்களது பணி மகத்தானது. உங்களது பணியில் ...
Also found in: [+]
2 ஆண்டுக்கும் மேலாக தோழமை திமுகவுடன் கூட்டணி சேர விருப்பம்: திருமாவளவன் பேட்டி 26.11.2018 Dinakaran.com |07 Dec 2016
விருதுநகர்: திமுகவுடன் 2 ஆண்டுக்கும் மேலாக தோழமையுடன் இருக்கிறோம், இது கூட்டணியாக மாற வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று நடந்த தி௫மணத்தில் கலந்து கொள்ள வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விருதுநகரில் அளித்த பேட்டி: விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் முறைப்படி பணிநியமனம் பெற்று, 2 ஆண்டாக பணிபுரிந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமையலர்கள் 46 பேரை பணிநீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தொழிலுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு காரணமாக, அதனை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர் வாழ்வாதாரம்  கேள்விக்குறியாக உள்ளது. இதில், மத்திய அரசு தலையிட்டு அவர்களை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் சேதாரங்களுக்கான நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்கியதில்லை. கஜா புயலால் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு கணக்கிட்டுள்ளது. இந்த நிதியை முழுமையாக வழங்க மத்திய அரசு ...
Also found in: [+]
பணி செய்ய அனுமதி மறுப்பு: தேசிய ஆணையத்தில் புகார் 23.11.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
காய்ச்சல் பாதிப்பை தவிர்க்க தீவிரம்: பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை 23.11.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
வேலூர் நேதாஜி மார்க்கெட் வெட்டவெளியில் காய்கறி கழிவுகளை கொட்டினால் 100 அபராதம்: மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை 21.11.2018 Dinakaran.com |07 Dec 2016
வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் 750 கடைகள் இயங்கி வருகின்றன. இதுதவிர 250 தரைக்கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் 50 டன்னுக்கும் அதிகமான காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், நேதாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் நடந்து செல்லும் வழித்தடத்தில் வியாபாரிகள் காய்கறி கழிவுகளை கொட்டிவிடுகின்றனர். இதனால், மார்க்கெட் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே, நேதாஜி மார்க்கெட்டை சுகாதாரமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தினமும் மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மக்களின் கோரிக்கை.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் நேதாஜி மார்க்கெட் வளாகத்தில் வெட்டவெளியில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. அதேபோல், மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டப்படும் காய்கறி கழிவுகளில் இருந்து குறிப்பிட்ட காய்கறிகளை சேகரித்து மீண்டும் விற்பனைக்கு வைப்பதை பொதுமக்களே நேரடியாக பார்க்கிறோம். சிலர் வீசப்படும் காய்கறி கழிவுகளை கொண்டு சென்று சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால், பல்வேறு தொற்று பாதிப்புகள் ஏற்படும். எனவே, நேதாஜி ...
Also found in: [+]
1 to 20 of 818