User: iihs_chennai Topic: tamil_tnussp_iihsmaa
Category: tam-urban-infrastructure
Last updated: Dec 25 2018 02:45 IST RSS 2.0
 
1 to 20 of 1,522    
சென்னையில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக விநியோகிக்க முடிவு 14.1.2019 Dinakaran.com |07 Dec 2016
* புதிதாக 6 திட்டங்கள் கொண்டு வர திட்டம்* பிப்ரவரி முதல் பணிகளை தொடங்க முடிவுசென்னை,  ஜன. 14: சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக விநியோகிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புதிதாக 6 திட்டங்கள் கொண்டு வர திட்ட மிடப்பட்டுள்ளது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் ேதவையை பூர்த்தி செய்யும் வகையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் உள்ளன. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் வடகிழக்கு பருவமழையின் போது நீர் சேமிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் 55 சதவீதம் குறைவாகவே பெய்தது. இதனால், 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளில் 1.2 டிஎம்சி நீர் மட்டுமே தற்போது உள்ளது. சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு 80 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், பற்றாக்குறை காரணமாக தற்போது 50 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது  இந்த ஆண்டு சற்று அதிக நீர் இருப்பு உள்ளது. ...
Also found in: [+]
சிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்பமர இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர்! 12.1.2019 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
சிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்ப மரத்தில் இலைகளைச் சுத்தம் செய்த ஆளுநர் பன்வாரிலாலின் செட்டப் குறித்து பொதுமக்கள் கமெண்ட் அடிக்கத் தொடங்கியுள்ளனர்
Also found in: [+]
உடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வழங்க கோரி மக்கள் போராட்டம் 12.1.2019 Dinakaran.com |07 Dec 2016
துரைப்பாக்கம்: பெருங்குடியில் உடைந்த குழாயை சீரமைத்து சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி, பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருங்குடி சீவரம், மாருதி நகர், மணிக்கொடி சீனிவாசன் நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக வசிக்கின்றனர். இந்த பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மணிக்கொடி சீனிவாசன் நகர் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது குடிநீர் குழாய் உடைந்ததால் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50 பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பாதாள சாக்கடை பணி நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துரைப்பாக்கம் போலீசார் சம்பவ ...
Also found in: [+]
உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு மசோதா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது : பிரதமர் மோடி பேச்சு 10.1.2019 Dinakaran.com |07 Dec 2016
சோலாப்பூர்: உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டின் பல மாநிலங்களில் கோடிக்கணக்கான மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் ஓடிசாவில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். நேற்று உத்தரப் பிரசேம் ஆக்ராவில் ரூ.2,980 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். ஆக்ரா மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் சுத்தமான தண்ணீர் சப்ளை அளிக்கும் கங்காஜல் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ஆக்ரா ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான ஒருங்கிணைந்த கட்டுபாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.   அதன்பின் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூருக்கு சென்ற பிரதமர் மோடி, தேசிய நெடுஞ்சாலை எண் 211-ன் சோலாப்பூர்-உஸ்மனாபாத் பிரிவின் நான்கு வழிச்சாலை திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பாலைகளை தொடங்கி வைத்தார். மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 30,000 வீடுகள் ...
திருவொற்றியூர் பகுதியில் செயல்பாட்டிற்கு வராத சுத்திகரிப்பு நிலையம் 9.1.2019 Dinakaran.com |07 Dec 2016
* சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் * நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டிற்கு வராததால், முக்கிய சாலைகளில் கால்வாய் அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடும் அவலம் உள்ளது.  திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் ஆல்இந்தியா ரேடியோ நகரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் எண்ணூர் விரைவு சாலை விரிவாக்கத்தின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  தற்போது, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதியில்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் மூலம் எர்ணாவூர் சாலை வழியாக பக்கிங்காம் கால்வாயில் சென்று கலக்கிறது. இந்த குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், தொட்டி நிரம்பி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், நாள் கணக்கில் தேங்கும் கழிவுநீரால் ...
Also found in: [+]
ஸ்மார்ட் சிட்டியாக மாறும் தூத்துக்குடி அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? 5.1.2019 Dinakaran.com |07 Dec 2016
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்துவதை தவிர்த்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகரமான தூத்துக்குடி மாநகராட்சி அந்தஸ்துடன் திகழ்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையம், நான்குவழிச்சாலைகள் என நான்கு வகையான போக்குவரத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றுள்ள தூத்துக்குடி தொழில்நகரமாக திகழ்ந்து வருகிறது.தென்தமிழகத்தின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாநகரம் இன்னும் சரியான வளர்ச்சியை எட்டவில்லை. ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கேற்ப குடிநீர், சுகாதாரம், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இன்றுவரை முழுமையாக பூர்த்தி அடையவில்லை.தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் குறுகலான சாலைகள், நடைபாதைகள் இல்லாதது, மாநகரை இரண்டாக பிரிக்கும் ரயில்வே கேட்டுகள், தரமில்லாத உருக்குலைந்த சாலைகள், சிறுமழை பெய்தாலும் தெருக்களில் தேங்கும் கழிவுநீர், பல ஆண்டுகளாகியும் பூர்த்தியடையாத பாதாள சாக்கடை திட்டம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ...
Also found in: [+]
பேரவையில் தமிழக அரசு விளக்கம் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கிறதா? 5.1.2019 Dinakaran.com |07 Dec 2016
திருவெறும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘’எனது தொகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தி–்ற்கு  2017 பிப்ரவரியில் டெண்டர் விடப்பட்டது. பணியை வேகமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பேஸ்-1 பணி நடைபெறுவதால் அங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. சாலைகளை சீரமைக்க வேண்டும்’’ என்றார். அமைச்சர் வேலுமணி: பாதாள சாக்கடை அமைப்பது சுலபமான வேலையல்ல. இருந்தபோதிலும் பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கே.என்.நேரு (திமுக): திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தவிதமான பணியும் நடைபெறவில்லை. அமைச்சர் வேலுமணி: ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கு பூங்காங்களை உருவாக்குவது முக்கியம். எல்லா மாநிலங்களிலும் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான பணிகள் சுணக்கமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும்தான் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான பணிகள் முடுக்கி ...
திருவொற்றியூர் மண்டலத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய 145 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை பணிகள் முடக்கம் 4.1.2019 Dinakaran.com |07 Dec 2016
* அதிகாரிகளின் மெத்தனமே காரணம் * பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டுதிருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில் ₹145 கோடி செலவில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 12 ஆண்டுகளாகியும் முடிவுக்கு வராமல் கிடப்பில் உள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே  இத்திட்டம் நிறைவு பெறாததற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் நகர், வடக்கு பாரதியார் நகர்,  ஜெய்ஹிந்த் நகர், சண்முகபுரம், சண்முகபுரம் விஸ்தரிப்பு, கார்கில் வெற்றி நகர், ராஜாஜி நகர், ராதாகிருஷ்ணன் நகர் உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் 250க்கும் மேற்பட்ட தெருக்களில் பாதாள சாக்கடை வசதியில்லை. இதனால், பொதுமக்கள் வீடுகளில் தொட்டி அமைத்து கழிவுநீரை தேக்கி வைத்து, தொட்டி நிரம்பியதும் தனியார் லாரிகள் மூலம் கழிவுநீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு லாரிகள் மூலம் கழிவுநீரை  அப்புறப்படுத்துவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு அதிக பணம் செலவாகிறது. எனவே, தங்களது பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் ₹88 கோடி செலவில் ...
Also found in: [+]
வடபழனி தீ விபத்தில் 4 பேர் பலியான வழக்கு சட்டவிரோத கட்டிடத்துக்கு 20 ஆண்டு வரிவசூலித்ததை ஏற்க முடியாது 4.1.2019 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: வடபழனியில் தீ விபத்து நடந்த சட்டவிரோத கட்டிடத்திற்கு கடந்த 20 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம் அந்த வரித்தொகை முழுவதையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக சென்னை மாநகராட்சி வழங்கலாம் என்று யோசனையும் தெரிவித்துள்ளது. சென்னை வடபழனியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த 2017 மே மாதம்  ஏற்பட்ட தீ விபத்தால் தரைதளத்தில் இருந்த 21 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம் பரவி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்த மீனாட்சி (65), அவரது மகள் செல்வி (40), பேரக்குழந்தைகள் சந்தியா(10), சஞ்சய்(3) ஆகியோர் மூச்சு திணறி இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பு, விதிமீறி கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை கடந்த 2016-ம் ஆண்டு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ள நிலையில், அது சட்டவிரோதமாக அகற்றப்பட்டு அந்த கட்டிடத்தில் பலர் வசித்துள்ளனர். இதற்கு சென்னை ...
காரைக்குடி பாதாள சாக்கடை பணியில் முறைகேடு 2.1.2019 Dinakaran.com |07 Dec 2016
காரைக்குடி :  காரைக்குடியில் நகராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணியில் முறைகேடு நடந்து வருகிறது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க அரசு ரூ.112 கோடியே 53 லட்சம் ஒதுக்கி உள்ளது. கழிவுநீர் சேகரிக்க 5559 ஆள் நுழைவு தொட்டி, 151.525 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. 31 ஆயிரத்து 725 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வீதிகளிலும் 5க்கும் மேற்பட்ட ஆள்நுழைவு தொட்டிகள் அமைகப்படுகின்றன. இந்த ஆள்நுழைவு தொட்டிகள் குழாய்கள் மூலம் இணைக்கப்படுகின்றன.ஒரு தொட்டிக்கும், மற்றொரு தொட்டிக்கும் இடையே 1.10 மீட்டர் அகலத்திற்கு பள்ளம் தோண்டி இணைப்பு குழாய் பதித்து அதன்மேல் 8 இஞ்ச் கனத்தில் கான்கிரீட் அமைக்க வேண்டும். ஆனால் இதுபோன்று செய்யாமல் முறைகேடாக 1 மீட்டர் அகலத்துக்கும் குறைவாக பள்ளம் தோண்டி அதன்மேல் 4 இஞ்சுக்கும் குறைவாக கான்கிரீட் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் பல லட்சம் ரூபாய் வரை மிச்சம் ஆகும். இதுபோல் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி வேலை நடக்கிறது. முறையான கவனிப்பு செல்வதால் முறையற்ற ...
திருவான்மியூர் அருகே வாலிபர் கொலையில் ஒருவர் கைது: முக்கிய குற்றவாளிக்கு வலை 2.1.2019 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: திருவான்மியூர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் நேற்று முன்தினம் மாலை பலத்த காயங்களுடன் கிடந்த வாலிபர் சடலத்தை, போலீசார் கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், திருவான்மியூர் பகுதியை சேர்ந்த கந்தா என்கிற கந்தகுமார் (29) என்பது தெரிந்தது.  இவர், கடந்த 2010ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சின்னய்யா என்பவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். மயிலாப்பூரில் உள்ள தாயுடன் வசித்து வந்த இவர், நேற்று முன்தினம்  உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவான்மியூர் வந்தபோது, கொலையான சின்னையாவின் மகன்களான சந்தோஷ், சதீஷ் ஆகிய இருவரும் பழிக்குப்பழியாக தனது  நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, கந்தகுமாரை வெட்டிக் கொன்று சடலத்தை கால்வாயில் வீசி சென்றது தெரியவந்தது. இந்த கொலையில் தொடர்புடைய திருவான்மியூர் பெரியார் நகரை  சேர்ந்த விக்னேஷ் (21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.* ராயப்பேட்டை யானை குளம் 5வது தெருவை சேர்ந்தவர் அக்தர் பாஷா (31). நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் ...
தூக்கி வீசும் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து: கேசி.கருப்பணன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் 31.12.2018 Dinakaran.com |07 Dec 2016
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு குழு அமைத்தார்.அந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனி சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் பிளேட், தண்ணீர் பாக்கெட், டீ கப் உள்ளிட்ட 14 வகையான ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு தடை விதித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஆறு மாத அவகாசமும் அளித்தார்.  பிளாஸ்டிக்குகளில் நூற்றுக்கணக்கான பொருட்கள் உள்ளது. இதில், 95 சதவீத பிளாஸ்டிக்குகளை மறு சுழற்சி செய்ய முடியும். அவற்றுக்கு எந்த  தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறிந்து விடும் பிளாஸ்டிக் கேரி பேக், கப், பாட்டில், ஷீட்கள் போன்றவற்றால்  தான் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. தனி மனித சுகாதாரத்துக்கும் பெரும் கேடாக உள்ளது. இந்த வகையில் மக்காத  5 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் உற்பத்தியாளர்கள் மற்ற 95 சதவீத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யலாம். ஒரு முறை ...
Also found in: [+]
பொறுப்பற்ற அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புங்க! ; ஐகோர்ட் உத்தரவு 29.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர் 28.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
தாலுகா நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் : நவகர்நாடக ரக்‌ஷணா வேதிகே முடிவு 28.12.2018 Dinakaran.com |07 Dec 2016
தங்கவயல்: தங்கவயல் தனி தாலுகாவாக அறிவித்து 6 மாதங்கள் கடந்தும் இன்னும் முழுமையாக நிர்வாக கட்டமைப்பு வசதி ஏற்படுத்தாமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த நவகர்நாடக ரக்‌ஷணா வேதிகே முடிவு செய்துள்ளது. இது குறித்து அமைப்பின் தலைவரும், வக்கீலுமான ராஜகோபால்கவுடா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, தங்கவயலில் அம்ருத் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்காக பல மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சில இடங்களில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக கான்கிரீட் பைப்புகள் பதிக்கப்பட்டும் பள்ளங்களை சரியாக மூடாமல் இருப்பதால் பொதுமக்கள் நடந்து ெசல்ல முடியாமலும், பைக்கில் செல்ல முடியாமலும் அவதிப்படுகிறார்கள்.  தங்கவயலை தனி தாலுகாவாக உருவாக்க கோரி 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து நடத்திய போராட்டத்தின் பலனாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் தாலுகா அறிவிக்கப்பட்டது. தனியாக தாசில்தாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தாலுகா நிர்வாகம் செயல்பட துவங்கி 6 மாதம் முடிந்தும் நிர்வாக கட்டமைப்பு வசதி செய்யப்படாமல் உள்ளது. இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும் ...
Also found in: [+]
2 ஆண்டுகளுக்கு பின் பாரதி சாலைக்கு விடிவு 25.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
ரோடெல்லாம் பள்ளம்; உடல் முழுக்க புழுதி! சீரமைக்க வலியுறுத்தி மனு 25.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

நலசங்க குரல் - 21.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
'டெங்கு' விழிப்புணர்வு முகாம் 20.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
மேட்டுக்குப்பம் பகுதியில் ஓட்டை உடைசல் தொட்டிகளால் சாலையில் சிதறும் குப்பை கழிவு: சுகாதார சீர்கேட்டில் மக்கள் 19.12.2018 Dinakaran.com |07 Dec 2016
துரைப்பாக்கம்: மேட்டுக்குப்பம் பகுதியில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் உடைந்துள்ளதால், குப்பை கழிவுகள் சாலையில் சிதறி கிடக்கிறது. சென்னை மாநகராட்சி 15வது மண்டலம், 194வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம், விபிஜி அவென்யூ, சிபிஎஸ் நகர், அன்னை அவென்யூ ஆகிய பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் இந்த தெருக்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக, தினசரி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  எனவே இங்குள்ள தெருக்களை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் உடைந்து காணப்படுவதால் சாலையில் குப்பை சிதறி கிடக்கிறது. அந்த பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்கள் இந்த குப்பையை கிளறி உணவு கழிவுகளை ...
Also found in: [+]
1 to 20 of 1,522