User: iihs_chennai Topic: tamil_tnussp_iihsmaa
Category: tam-water-supply
Last updated: Jan 24 2019 02:14 IST RSS 2.0
 
1 to 20 of 29,261    
அணைகளில் நீர் இருப்பு குறைகிறது ... கோடை காலத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் 24.1.2019 Dinakaran.com |07 Dec 2016
மஞ்சூர்: தொடர் மின்சார உற்பத்தி, குடிநீர் தேவை உள்ளிட்ட காரணங்களால் அணைகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் 12 நீர் மின் நிலையங்கள் உள்ளன. குறிப்பாக அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, கிளன்மார்கன் உள்ளிட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்படி குந்தாவில் 60 மெகாவாட், கெத்ைதயில் 175 மெகாவாட், பரளியில் 180 மெகாவாட், பில்லூரில் 100 மெகாவாட், அவலாஞ்சியில் 40 மெகாவாட், காட்டுகுப்பையில் 30 மெகாவாட், என பல்வேறு அணைகளில் இருந்து மொத்தம் 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் மின் உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் தண்ணீர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி, பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக போதிய மழையின்மை காரணமாகவும், பனிபொழிவு காரணமாகவும் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ...
Also found in: [+]
கேரள வெள்ளத்தில் மூழ்கி கெட்டுப்போனவை - திருச்சியில் பாலிஷ் போட்ட 100 லோடு அரிசி பறிமுதல் 24.1.2019 Dinakaran.com |07 Dec 2016
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ₹30 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் இடிந்தன. விவசாய நிலங்கள் சேதமடைந்தன. வெள்ளப் பெருக்கின்போது கேரள நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விற்பனை செய்வதற்காக எர்ணாகுளம் பெரும்பாவூரில் உள்ள 2 அரிசி மில்களில் ைவக்கப்பட்டிருந்த 100 லோடுக்கு மேல் அரிசி மூட்டைகள் தண்ணீரில் மூழ்கி கெட்டுப்போனது.இந்த அரிசியை கால்நடைகளுக்கு கூட கொடுக்கக் கூடாது என்றும், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த அரிசியை திருச்சியை சேர்ந்த சில தனியார் மில் உரிமையாளர்கள் வாங்கிச்சென்றனர். பின்னர் கெட்டுப்போன இந்த அரிசியை பட்டை தீட்டி மீண்டும் கேரள நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு விற்பனை செய்ய தயாராக வைத்திருப்பதாக தகவல் வெளியானது.இதுதொடர்பாக விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டார். விசாரணையில், திருச்சி துறையூரில் உள்ள ஒரு அரிசி மில்லில் கெட்டுப்போன அரிசியை சுத்தம் செய்து கேரளாவுக்கு அனுப்ப தயாராக வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தமிழக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு ...
Also found in: [+]
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நவீன கப்பலை வடிவமைத்து 12 வயது சிறுவன் அசத்தல் 23.1.2019 Dinakaran.com |07 Dec 2016
மும்பை : மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் வகையில் கப்பல் ஒன்றை வடிவமைத்து அசத்தி இருக்கிறான். புனே நகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஹஸீக் காஸி தான் இந்த நவீன கப்பலை வடிவமைத்து இருக்கிறான். சென்டரிபீட்டல் ஃபோர்ஸ் எனப்படும் மைய நோக்கு விசையால்  இயங்கும் இந்த கப்பல் கடலில் இருந்து கழிவுகளை சேகரித்து தரம் வாரியாக பிரிக்கும் தன்மையுடையது என்கிறார் ஹஸீக் காஸி. இதனால் கடல் வாழ் உயிர்களுக்கு பாதிப்பு இருக்காது என்கிறார் ஹஸீக் காஸி. தண்ணீர் கப்பலுக்குள் உறிஞ்சப்படும் போது  அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் உயிரினங்களை மீண்டும் கடலுக்குள் தள்ளிவிடுவமாம். கடலில் கலக்கும் கழிவுகளை அகற்றும் ஹஸீக் காஸியின் புதிய திட்டம் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த ஹஸீக் காஸி பேட்டியில் கூறியுள்ளதாவது,'ஒரு நாள் நான் கைகளை கழுவும் போது நீர் செல்லும் போக்கை கவனித்தேன்; அப்போது, உலகில் உள்ள ஆழமான கடல்களுக்கு கீழே சுத்தம் செய்யவும், கடல் வாழ் உயிரினங்களை காப்பாற்றவும் எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது; அப்போது தண்ணீரின் ...
Also found in: [+]
காளையார்கோவில் பகுதியில் கோடைக்கு முன்பே வறண்ட குளங்கள் : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் 23.1.2019 Dinakaran.com |07 Dec 2016
காளையார்கோவில்: காளையார்கோவில் பகுதியில், கோடைக்கு முன்பே குளங்கள், கண்மாய்கள், ஊருணிகள் வறண்டு கிடப்பதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.  காளையார் கோவிலை சுற்றியுள்ள 43 கிராம பஞ்சாயத்துகளில், 360க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லை. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த போதும், அதில் பாதியளவு கூட இப்பகுதியில் மழை பெய்யவில்லை. இந்தாண்டும் காளையார்கோவில் பகுதியில் போதிய மழை இல்லை. இதனால், பல ஏக்கர் நெல் விவசாயம் பாதியிலேயே கருகிவிட்டன. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, இப்பகுதியில் உள்ள கண்மாய், குளம், ஊருணி மற்றும் குட்டைகளில் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. வீடுகளில் உள்ள போர்வெல்கள், தோட்டங்களில் உள்ள விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால், காய்கறி, கடலை, மிளகாய், கரும்பு உள்ளிட்ட சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால் கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், கிராமந்தோறும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நகர்ப்புறங்களிலும் ...
Also found in: [+]
மீண்டும், மீண்டும் தண்ணீர் திறந்ததால் சரிந்து வரும் வைகை அணை நீர்மட்டம் : பொதுமக்கள் கவலை 23.1.2019 Dinakaran.com |07 Dec 2016
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து முறை பாசானத்திற்காக பொதுப்பணித்துறையினர் மீண்டும் தண்ணீர் திறந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு தென்மேற்கு பருவமழையினால் நீர்வரத்து அதிகம் ஏற்பட்டதால் நீர்மட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி 69 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து வினாடிக்கு 3,333 கனஅடி உபரி நீர் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் திறக்கப்பட்டது. மேலும்  உசிலம்பட்டி தாலுகா விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ஆகஸ்ட் 22ம் தேதி 58 கிராம பாசன கால்வாயில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையாலும், கஜா புயலாலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகி வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியில் மீண்டும் அணை 69 அடியை கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி இரண்டாவது முறையாக எட்டியது. இதனையடுத்து டிச. 15ம் தேதி தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் மதுரை, ராமநாதபுரம், ...
Also found in: [+]
தமிழகத்தில் முதன் முறையாக பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் : சேலம் புதிய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது 23.1.2019 Dinakaran.com |07 Dec 2016
சேலம்: தமிழகத்தில், முதன்முறையாக சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் நிறுவனம் சார்பில் ₹2லட்சத்தில் பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி கமிஷனர் சதீஷ் நேற்று துவக்கி வைத்தார். இந்த இயந்திரத்திற்குள் 250 மில்லி முதல் 2.25 லிட்டர் வரையிலான காலியான பிளாஸ்டிக் பாட்டிலை போடும் போது, அவை மறுசுழற்சிக்கு ஏற்றவாறு அரைக்கப்பட்டு இயந்திரத்தில் சேகரமாகும்.மேலும், காலியான பிளாஸ்டிக் பாட்டிலை போட்டவுடன், இயந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன்களை அழுத்தி 5 வகையான சலுகைகளை இலவசமாக பெற முடியும். அதன்படி 5 நிமிடம் இலவசமாக செல்போனை வேகமாக சார்ஜ் செய்யும் ...
Also found in: [+]
குறைந்த அளவு தண்ணீரில் அதிக பயன்பெற தொழில் நுட்பக் கருவிகளை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்... 22.1.2019 தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today


சிவகங்கை- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண் ...(Feed generated with FetchRSS)
Also found in: [+]
சளியினால் ஏற்படும் தொல்லைகளை விரட்டும் அற்புத மருந்து மிளகு..!! 22.1.2019 மரு‌த்துவ‌ம்
மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
Also found in: [+]
வறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்! 22.1.2019 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
பக்கத்து தோட்டக்காரங்க வயல்கள்ல பெரிய பலமான மரங்களே காத்துல சாய்ஞ்சுட்டு ஆனா எனது அஞ்சு ஏக்கர் வாழைத்தோட்டத்தில் இருந்து ஒரு வாழை மரத்தைக்கூட கஜாவால் கீழே
Also found in: [+]
`கண்மாயில் விஷம் கலந்தது யார்?’ கண்டுபிடிக்கத் தயங்கும் தேனி மாவட்ட நிர்வாகம்! 22.1.2019 Junior Vikatan
தேனி மாவட்ட மீறு சமுத்திர கண்மாயில் கலக்கப்பட்ட விஷத்தால் மீன்கள் செத்துமிதக்கின்றன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Also found in: [+]
குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள சமையலறை குறிப்புகள்..! 22.1.2019 மரு‌த்துவ‌ம்
சாறு பிழிந்த எலுமிச்சம்பழத் தோலைத் தூக்கி எறிந்துவிடாமல் உருளைக்கிழங்கு வேகவைக்கும்போது அதோடு சேர்த்து வேகவையுங்கள். உருளைக்கிழங்கு பொரியல் கமகமவென்று மணம் வீசும்.
Also found in: [+]
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு : சட்டத்திருத்த அரசாணை வெளியீடு 22.1.2019 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: கட்டுமான ெதாழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவது தொடர்பாக சட்ட திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளது. தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில், 407 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 247 அம்மா உணவகங்களும் மற்றும் ஊரகப் பகுதிகளில் 4 அம்மா உணவகங்கள் என்று மொத்தம் 658 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை ஒரு ரூபாய்க்கு இட்லி, ₹5 க்கு பொங்கல், மதியம் ₹3க்கு தயிர் சாதம், ₹5க்கு பலவகை சாதங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள உணவகங்களில் மட்டும் இரவில் ₹3க்கு 2 சப்பாத்திகள்  விற்பனை செய்யப்படுகின்றன.சென்னையில் நாள் ஒன்றுக்கு 2.50 லட்சம் மக்கள் அம்மா உணவகங்களில் உணவு உட்கொள்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 99.58 கோடி இட்லிகளும், 35.8 கோடி பலவகை சாதங்களும், 25.7 கோடி சப்பாத்திகளும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு ...
Also found in: [+]
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு 22.1.2019 Dinakaran.com |07 Dec 2016

தாம்பரம்: குரோம்பேட்டை, சாந்தி நகரை சேர்ந்தவர் சரோஜா (75). இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு கிணற்றில் இருந்து வாளியில் தண்ணீர் இறைக்க முயன்றபோது தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர், சரோஜாவை மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரோஜாவை கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் மீட்டனர். இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Also found in: [+]
தண்டையார்பேட்டையில் பைப்லைன் உடைப்பால் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல் 22.1.2019 Dinakaran.com |07 Dec 2016
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் உள்ள நெடுஞ்செழியன் நகர், நேதாஜி நகர், கருணாநிதி நகர், தமிழன் நகர், படேல் நகர் மக்களுக்கு பட்டேல் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், இருந்து பைப்லைன் மூலம் மேற்கண்ட பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் சரியாக வரவில்லை என தெரிகிறது. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர். இதுபற்றி குடிநீர் வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பரபரப்பு நிலவியது. தகவலறிந்து ஆர்கே நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘குடிநீரில் கலந்துள்ள கழிவுநீரை பாட்டிலில் பிடித்து வைத்து போலீசாரிடம் காண்பித்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ...
Also found in: [+]
சொன்னதை செய்தாரா உங்கள் (நீலகிரி) எம்.பி கோபாலகிருஷ்ணன்...? 22.1.2019 Dinakaran.com |07 Dec 2016
இசையோடு சேராத பாட்டு - இன்பமில்லை. பகுத்தறிவு இல்லாத பார்வை-பயனில்லை. சொல் ஒன்று; செயல் வேறு- இது, நாட்டுக்கும் கேடு; வீட்டுக்கும் கேடு. இதில், உங்கள் தொகுதி எம்பி. எப்படி? 2014 தேர்தலில் சொன்னதை செய்தாரா? தொகுதியை கவனித்தாரா? வளமாக்கினாரா?அல்லது தன்னை வளமாக்கினாரா? இதை பற்றி அலசுவதுதான் இந்த பகுதி. காரணம், மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே பாக்கி. அதில், உங்கள் தொகுதியின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கப் போகும் சக்தி நீங்கள்தான். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!’ இனி, முடிவு உங்கள் கையில்!சுய விவரம்பெயர்    சி.கோபாலகிருஷ்ணன் கல்வி    எம்ஏ., எம்.பில்., எல்.எல்.பி., ெதாழில்    வக்கீல்பிறந்த இடம்    குன்னூர்பிறந்த தேதி    17.02.1962வயது    57தந்தை பெயர்    சின்னராஜ்தாயார் ெபயர்    லோகம்மாள்மனைவி    சுசீலாகுழந்தைகள்    இல்லைமுகவரி    69, முத்தாளம்மன் தெரு, ஓட்டுப்பட்டரை, குன்னூர், நீலகிரி மாவட்டம்.மக்களவை செயல்பாடு:வருகை பதிவேடு    78% கேட்ட கேள்விகள்    696 பங்கேற்ற விவாதம்    482014ல் காட்டிய சொத்து கணக்குஅசையும் சொத்துகோபாலகிருஷ்ணன்    ₹20.24 லட்சம்மனைவி சுசீலா    ₹14.16 லட்சம்அசையா ...
Also found in: [+]
வீடு வீடாக திருட்டு கேசட் விற்றவர் டிடிவி.தினகரன் : அமைச்சர் வீரமணி கடும் தாக்கு 22.1.2019 Dinakaran.com |07 Dec 2016
ஜோலார்பேட்டை,: ‘வீடு வீடாக திருட்டு கேசட் விற்றவர் டிடிவி தினகரன்’ என்று ேஜாலார்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி கடுமையாக தாக்கி பேசினார்.வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகரில் நேற்று  முன்தினம் இரவு நடந்தது. இதில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது: இலங்கையில் பிறந்து தமிழகம் வந்து நாடகம், சினிமா மூலம் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அவரால் உருவாக்கப்பட்ட அதிமுகவை இதே இயக்கத்திலிருந்து தின்று கொழுத்து, நம்மை சிரமத்திற்கு ஆளாக்கியவர்கள்தான் இந்த மாபியா கும்பல் சசிகலா குடும்பம்.  திருட்டு கேசட் விற்க வந்த சசிகலா குடும்பத்துடன் இணைந்து வீடு வீடாக சென்று திருட்டு கேசட் விற்றவர் டிடிவி தினகரன். சில எம்எல்ஏக்களை தன் வசம் இழுத்து கட்சியையும், ஆட்சியையும் அழிக்க நினைக்கிறார்கள். இன்னும் பல நூறு ஆண்டு கடந்தாலும் இந்த இயக்கத்தை அழிக்க  முடியாது. ஜோலார்பேட்டை தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ₹1,250 கோடி நிதி ஒதுக்கி தற்போது வேலூர் மாவட்டம் ...
Also found in: [+]
``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..!"- நார்த்தாமலை சிவனடியார்கள் குமுறல் 21.1.2019 Junior Vikatan
நார்த்தாமலையில் சுனை லிங்கத்தை மீட்டவர்கள் பூஜை செய்யக் கூடாது என்று தற்போது தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது சிவனடியார்களை கொதித்தெழச் செய்துள்ளது. 
Also found in: [+]
வெந்நீர் குடிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும் தெரியுமா...! 21.1.2019 மரு‌த்துவ‌ம்
வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது.
Also found in: [+]
உடல் எடையை குறைக்க உதவும் மூலிகை டீ செய்வது எப்படி...? 21.1.2019 மரு‌த்துவ‌ம்
பலரும் உடல் எடையை குறைக்க பணத்தை செலவழிக்கும்போது நாம் அன்றாடம் சாப்பிடும் மூலிகைகள் கொண்டு ஒரு டீ குடித்தால் போதும், உடல் எடை சரசரவென குறையும். உடல் எடை குறைவதை விட முக்கிய பலன் ஒன்று உள்ளது, அது தான் உடலின் ஆரோக்கியம்.
Also found in: [+]
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து தொழிற்சாலைகள் தண்ணீரை எடுப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 21.1.2019 Dinakaran.com |07 Dec 2016

டெல்லி : ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து தொழிற்சாலைகள் தண்ணீரை எடுப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக சார்பில் ஜோயல் என்பவர் தொடுத்த வழக்கை ஜனவரி 28ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீர் எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டுமே நீரை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜோயல் வழக்கு தொடர்ந்தார்.

Also found in: [+]
1 to 20 of 29,261