User: dp637 Topic: Screenlist
Category: Screenlist
Last updated: Feb 17 2019 14:20 IST RSS 2.0
 
1 to 20 of 20,344    
டெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்… 17.2.2019 மாலை முரசு
டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரெயில் வர்த்தக ஓட்டம் இன்று தொடங்கியது. டெல்லி-வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த வெள்ளிகிழமை தொடங்கி வைத்தார். சென்னை ஐ.சி.எப். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த ரெயிலில், 16 பெட்டிகளும் குளிர்சாதன வசதியுடன் கூடிய அமரும் இருக்கைகள், வை-பை வசதி, ஒவ்வொரு இருக்கையின் கீழ் செல்போனை சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சாய்வு வசதி கொண்ட உட்காரும் இருக்கைகள், […]
மேக் இந்தியா திட்டம் குறித்து பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும் – ராகுல்காந்தி 17.2.2019 மாலை முரசு
மேக் இந்தியா திட்டம் குறித்து பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் பழுதடைந்து பாதியில் நின்றது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை அவர் டெல்லியில் தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து வாரணாசி சென்றடைந்த வந்தே பாரத் ரயில், மீண்டும் வாரணாசியில் இருந்து டெல்லி திரும்பியது. இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், […]
டிக்கெட் புக்கிங் வெப்சைட்டில் 1.80 கோடி பாஸ்வேர்ட் திருட்டு 17.2.2019 Dinakaran.com |07 Dec 2016
பெங்களூரு:  இக்சிகோ இணையதளத்தின் வாடிக்கையாளர்கள் 1.80 கோடி பேரின் இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் திருடப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமை தலையிடமாக கொண்டு டிராவல் மற்றும் ஓட்டல் அறை முன்பதிவு இணையதள நிறுவனமான இக்சிகோ இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்ஸ்சில் ரயில், பஸ், விமானம், ஓட்டல் முன்பதிவு வசதி உள்ளது.  இந்த இணையதளத்தில் சுமார் 10 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சராசரியாக 2 கோடி ஒவ்வொரு மாதமும் இந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த இணையதளத்தை பயன்படுத்துபவர்களில் சுமார் 1 கோடியே 80 லட்சம் பேரின் விவரங்களை ஹேக்கர்ஸ் திருடி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது. இந்த செய்தியை இங்கிலாந்தின் இணையதளமான தி ரிஜிஸ்டர் அம்பலப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் இமெயில் முகவரி மற்றும் பாஸ்வோர்ட் திருடப்பட்டுள்ளதாக இக்சிகோ நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. தங்கள் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அனைவரும் தங்கள் பாஸ்வோர்டை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.  இது குறித்து இக்சிகோ நிறுவனத்தின் தலைவர் அலோக் ...
குறைந்தது ஹானர் ஸ்மார்ட்போனின் விலை!! உடனே முந்துங்கள்.. 16.2.2019 செய்திகள்
ஹானர் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பை அமல்படுத்தியுள்ளது. அமேசானில் வழங்கப்பட்டுள்ள ஹானர் டேஸ் விற்பனையில் இந்த விலை குறைப்பு பிப்ரவரி 18 ஆம் தேதி வரை வழங்கபப்டுகிறது.
1 TB மெமரி, 12 GB ரேம், ஸ்டைலிஷ் டிசைன்... மிரட்ட வருகிறது #SamsungGalaxyS10 16.2.2019 Junior Vikatan
அன்றைக்கு சம்சங்கின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதால் வரும் 21-தேதிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் சாம்சங் ரசிகர்கள்
`Zombie மட்டுமல்ல; இன்னும் நிறைய வரும்!’ பப்ஜி புது அப்டேட்ஸ் #VikatanExclusive 16.2.2019 mukkiyaseithi_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
பப்ஜி
தமிழகத்தில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரிப்பு ; தரமானதை மட்டும் வாங்கும்படி அதிகாரி வலியுறுத்தல் 15.2.2019 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: தமிழகத்தில் போலீசாரின் தீவிர சோதனை காரணமாக, ‘போலி ஹெல்மெட்’ விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதை வாங்கி பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட தரமான ெஹல்மட் மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரி வலியுறுத்தியுள்ளார். மாநிலத்தில் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதில், இரு, நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இருசக்கர வாகனங்கள், 2.15 கோடிக்கு மேல் உள்ளன. மேலும் மோட்டார் கார்களின் எண்ணிக்கை, 24 லட்சத்துக்கும் மேலாக இருக்கிறது. இந்நிலையில் பல வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணியாமலும், சீட் பெல்ட் போடாமலும், மது குடித்துவிட்டும், மொபைல் போன்களில் பேசிக்கொண்டும், ஒருவழிப்பாதையில் பயணிப்பது ேபான்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி, அவர்கள் இறப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. கடந்த, 2018ம் ஆண்டில் மாநிலம் முழுவதும், 59 ஆயிரத்து 277 விபத்துக்கள் நடத்துள்ளது. இதில், 11 ஆயிரத்து 266 பேர் இறந்துள்ளனர். இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளால் ஏற்படும் ...
தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் பலி எதிரொலி : செல்போன் சேவை நிறுத்தம், தெற்கு காஷ்மீரில் இணையதள சேவை 2ஜி ஆக குறைவு 15.2.2019 Dinakaran.com |07 Dec 2016
ஸ்ரீநகர் : பாதுகாப்பு படையினர் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீரில் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலால் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியான சம்பவம்ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த (சிஆர்பிஎப்) 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் நேற்று சென்று கொண்டு இருந்தனர்.   புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.அப்போது, ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென ேவகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினான். உடனே, அந்த வாகனம் பயங்கரமாக வெடித்தது. இதில், பேருந்தும் வெடித்து சிதறி சின்னா பின்னமானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில், பேருந்தில் இருந்து வீரர்கள் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பலியாகி விழுந்தனர்.  இந்த கொடூர சம்பவம் நடந்ததும், பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த வீரர்களும்,  பின்னால் வந்து கொண்டிருந்த ...
போச்சா... போச்சா... பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் போச்சா... மொத்தமா சாய்த்த ஜியோ!! 14.2.2019 tamil.webdunia.com
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் வருகை தந்ததற்கு பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுல் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்று.
மார்க் தி டேட்... 5ஜி ஸ்மார்ட்போனை களமிறக்கும் சியோமி!!! 14.2.2019 செய்திகள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சியோமி நிறுவனம், இம்மாதம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவை போட்டுள்ளது.
அறையை எங்கிருந்தாலும் கண்காணிக்கலாம்... ஷியோமியின் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா 14.2.2019 technology_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
அறையை எங்கிருந்தாலும் கண்காணிக்கலாம் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமராவை அறிமுகப்படுத்தியது ஷியோமி
நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் எனது அரசு 100 சதவீதத்திற்கும் மேலாக உழைத்துள்ளது : மக்களவையில் பிரதமர் பேச்சு 13.2.2019 Dinakaran.com |07 Dec 2016
டெல்லி: நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் எனது தலைமையிலான அரசு 100 சதவீதத்திற்கும் மேலாக உழைத்துள்ளது என மக்களவையின் கடைசி அலுவல் நாளில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நடப்பு மக்களவையின் கடைசி அலுவல் நாளான இன்று பேசிய பிரதமர், அடுத்த முறை இங்கு மீண்டும் வருவேனா மாட்டேனா என்பது தெரியாது. அது மக்கள் மற்றும் கடவுளின் கையில் உள்ளது என்றார். நாடாளுமன்றத்தின் அமைப்பு மற்றும் செயல்முறைகள் குறித்து எதுவுமே தெரியாமல் ஒரு புதுமுகமாக தான் இங்கு கடந்த 2014-ல் காலடி எடுத்து வைத்ததாக கூறினார். டிஜிட்டல் பாதையில் இந்தியா பயணிப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய பிரதமர், தமது தலைமையிலான அரசு மதிப்பிற்குரிய அரசு என பெயர் வாங்கியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேக் இன் இந்தியா திட்டம் பலனளித்து வருகிறது. மேலும் வங்கதேசம் - இந்தியா இடையிலான நிலப்பிரச்சனையை தீர்த்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் இடர்பாடுகளில் சிக்கிய அண்டை நாடுகளுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளோம். ஐ.நா அவையில் இந்தியாவின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் யோகாவை இந்த அரசு பிரபலப்படுத்தியுள்ளது என்றார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக ...
“ரபேல் ஊழலுக்கும், ராகுல் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை” – ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு! 13.2.2019 NTamil.com
ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு…
டிக் டொக் தடைசெய்யப்படும் அளவுக்கு ஆபத்தானதா? #TikTok 13.2.2019 technology_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
கருவறை கூட இல்லை கரு உருவாகும் இடத்தில் கூட டிக் டொக் நுழைந்துவிட்டது ஒரு தம்பதியினர் தங்கள் முதலிரவு அறைக்குள்ளிருந்து ஒரு டிக் டொக் வீடியோ போட்டிருந்தனர்
அதிவேக மொபைல் டேட்டா நெட்வொர்க் எது தெரியுமா...? 13.2.2019 tamil.webdunia.com
இந்தியாவில் உள்ள 4ஜி நெட்வொர்க் சிக்னல் பற்றி ஆய்வு ஒன்றை ஊக்லா என்னும் நிறுவனம் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆப்பிளுக்கு பதில் இந்த ஆப்பிள்: ஐய்யோ தேவுடா... புலம்பும் இளைஞர்! 13.2.2019 tamil.webdunia.com
சீனாவில் வனவிலங்கு சரணாலத்தில் இளைஞர் ஒருவர் கரடிக்கு ஆப்பிள் போடுவதற்கு பதில் தனது ஆப்பிள் ஐபோனை தூக்கி போட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் – அமைச்சர் மணிகண்டன் 13.2.2019 மாலை முரசு
கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வரும் டிக் டாக் என்னும் செயலியை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணி கண்டன் உறுதி அளித்துள்ளார். இளைஞர்களின் பொழுதை கழிக்க புதிய அவதாரம் எடுத்துள்ள டிக் டாக் இசைசெயலியில், தற்போது காவல்துறைக்கு சவால் விடும் விதமாகவும், மத உணர்வுகளை தூண்டும் விதமாகவும் காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இந்த செயலியை பயன்படுத்துவதால் அவர்களது வீடியோக்கள் தவறுதலாக பயன்படுத்த வாயப்பு இருப்பதாக […]
டிக் டாக்கிற்கு தடை விதித்தால் சந்தோஷம் தான் தேர்தல் கூட்டணி அமைக்க கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி 13.2.2019 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: டிக் டாக்கிற்கு தடை விதித்தால் சந்தோஷம் தான் என்றும், நாடாளுமன்றம் தேர்தல் தொடர்பாக பல கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடக்கிறது  என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். நேற்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு  பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி: டிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் சந்தோஷம் அடையும் முதல் நபர் நானாக தான் இருப்பேன். பல இடங்களில் டிக் டாக்  செயலி தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்காக நாளை மறுதினம் அமித்ஷா ஈரோடு வருகிறார். 15ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகம் வருகிறார். இதே போல பல்வேறு  தேசிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். வாக்குசாவடி அளவில் எங்களை நாங்கள் பலப்படுத்தி வருகிறோம். கன்னியாகுமரிக்கு மோடி வருகை சற்று தள்ளி  போகிறது.  திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அதிக அளவில் விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்பதற்கு நல்ல  வரவேற்பு உள்ளது. காங்கிரஸ் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி பேசிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். முதல்வருக்கு பாராட்டு: தமிழக பாஜ தலைவர் தமிழிசை வெளியிட்ட அறிக்கையில் ...
அமைச்சர் செங்கோட்டையன் பதில் 5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தமிழகத்தில் அமலாகுமா? 13.2.2019 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: சட்டப் பேரவையில் நாகப்பட்டினம் தமிமுன் அன்சாரி (மஜக): பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து பாடத்திட்டத்தில் தவறாக சேர்க்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. அமைச்சர் செங்கோட்டையன்: இது தவறான செய்தி. 7ம் வகுப்பு பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி இடம்பெற உள்ளது. அதில் தவறான  விஷயங்கள் உள்ளதாக கூறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிமுன் அன்சாரி: 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று கூறப்படுகிறது. இதனால் தொடக்ககல்வி படிப்போர் கல்வி பாதிக்கப்படும்.அதை அரசு பரிசீலிக்க  வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகத்தில் இன்னும் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருச்சுழி தங்கம் தென்னரசு (திமுக): அமைச்சர் இது குறித்து முடிவு எடுக்கவில்லை என்கிறார். இது முக்கியமான விஷயம். அமைச்சர் செங்கோட்டையன்: அமைச்சரவை கூடித்தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். டிக் டாக்குக்கு தடையா?: தமிமுன் அன்சாரி: டிக் டாக் செயலி தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, அதை தடை செய்ய  வேண்டும். அமைச்சர் மணிகண்டன்: டிக் டாக் செயலி ...
நோ பால், சிக்சர்: சட்டசபையில் காரசாரம் 12.2.2019 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

1 to 20 of 20,344